பொதுவாக சேமியாவை வைத்து பாயாசம் மற்றும் இனிப்பு பண்டங்கள் பல வகை செய்வது வழக்கம். இதே போல தயிரை வைத்தும் பல ரெசிபிகளை செய்யலாம்.

ஆனால் இன்றைய பதிவில் தயிர் சேமியா எப்படி செய்யலாம் என்பதை பார்கலாம். தயிர் சேமியா மூன்று முறையில் மக்கள் செய்து சுவைக்கிறார்கள். அதில் ஒரு ரெசிபியை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • 150 கிராம் சேமியா
  • ½ கப் மாதுளை விதைகள்
  • 350 கிராம் பிரஷ் தயிர்
  • ½ கப் பால்
  • 1 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • 10 முந்திரி பருப்பு
  • 10  திராட்சை
  • ¼ மேசைக்கரண்டி கடுகு
  • ¼ மேசைக்கரண்டி சீரகம்
  • 1 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 1 மேசைக்கரண்டி கடலை பருப்பு
  • 1 மேசைக்கரண்டி எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதளவு கறிவேப்பிலை
  • சிறிதளவு கொத்தமல்லி

செய்யும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அவித்து வடிகட்டி வைக்க வேண்டும்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் தயிர் சேமியா இப்படியும் செய்யலாமா? | Health Food Yogurt Samiya Healthy Food Recipeபின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, மற்றும் முந்திரியை போட்டு வதக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அவித்த சேமியா மற்றும் தயிரை போட்டு கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் உப்பும் சேர்த்து கலக்க வேண்டும்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் தயிர் சேமியா இப்படியும் செய்யலாமா? | Health Food Yogurt Samiya Healthy Food Recipeபின்னர் தாழித்து வைத்தவற்றை தயிர்க்கலவையில் போட்டு அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி தளைகளை போட வேண்டும்.

இதன் பிறகு மாதுளம் விதைகளை போட்டு திராட்சைகளையும் போட்டு கலந்து கொண்டால் தயிர் சேமியா தயார். இது மிகவும் ஆரோக்கியமான உணவாகும்.

இதை டயட்டில் இருப்பவர்கள் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். இது மிகவும் ஆரோக்கியம் நிறைந்த உணவாகும்.