பொதுவாகவே பாம்புகள் என்றால் எல்லோருக்கும் இனம்புரியாத ஒரு பீதி இருக்கும். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று ஒரு பழமொழி கூட இருக்கின்றது.
பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. அதற்கு காரணம் அதன் விஷம் தான்.
பாம்புகளுக்கு பற்களில் விஷம் இருப்பது தனது இரையை எளிமையாக வேட்டையாடுவதற்காகத்தான்.
ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது வேட்டையாடுவதற்காகவோ அல்லது கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்ல.
மனிதர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தின் காரணமாகவே இவ்வாறு தாக்குகின்றன.
இந்துக்களை பொருத்தவரையில் பாம்புகள் தெய்வங்களாகவும் பார்க்கப்படுக்றது. இதற்கான கோவில்களையும் கூட பார்க்கமுடியும்.
ஆனால் பாம்புகளால் மனிதர்களுக்கு பெரும்பாலும் தீமைகளே விளைகின்றது. வயலில் பாம்புகள் எலிகளை கொல்வதனால் விவசாயிகளுக்கு உதவியாக இருந்தாலும் இது இவர்களின் உயிருக்கும் கூட அச்சுறுத்தலாகவே அமைகின்றது.
பாம்பின் விஷத்திலிருந்து சில கொடிய நோய்களுக்கு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றது.
நிபுணர்களின் கருத்துபடி பாம்புகளை அடித்து கொல்வது அல்லது அவற்றை பிடிப்பது போன்றவற்றை விட அவைகளை விரட்டுவது தான் பாதுகாப்பானது.
அதன் அடிப்படையிலேயே கடுகு எண்ணெயை எரிப்பதன் மூலம் வட மாநில விவசாயிகள் பாம்புகளை விரட்டுகின்றனர்.
பல ஏக்கர் பரப்பளவு கொண்ட பாரிய நிலப்பரப்பிலான வயலில் விவசாயிகள் தங்கினாலும், கடுகு எண்ணெயை எரிப்பதால் அவர்கள் பக்கம் பாம்புகள் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.