பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
அதுபோலவே எண்கணித ஜோதிடத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுகின்றது.
அந்த வயைில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் தங்களின் துணையை ஏமாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த திகதிகளில் பிறந்தவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்தெந்த திகதிகள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எண் 6
எண்கணித ஜோதிடத்தின் பிரகாரம் எந்த மாதமாக இருந்தாலும் 6,15 மற்றும் 24 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் அன்பு மற்றும் அக்கறையான மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் துணையின் மீத அதிக அக்கறை கொண்டவர்களாகவும் சிறப்பாக கவனித்துக்கொள்பவர்களாக இருக்கின்ற போதிலும் தங்களின் உணர்ச்சி தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக துணையை ஏமாற்ற தயங்க மாட்டார்கள்.
எண் 3
மாதத்தின் 3,12,21,30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பிலேயே மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மீது பலரும் காதல் கொள்ளும் வாய்ப்பு காணப்படுவதால் துணையை இந்த விடயத்தில் ஏமாற்றும் வாய்ப்பு காணப்படுகின்றது.
எண் 8
மாதத்தின் 8,17,26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு ஆசை மிகவும் உச்சத்தில் இருக்கும். இவர்கள் மற்றவர்களுடன் எளிமையாக காதலில் விழும் குணம் கொண்டவர்களாக இருப்பதால் துணையை ஏமாற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்.
எண் 9
மாதத்தின் 9,18,27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அன்பான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்ளின் துணையை மிகவும் பாசமாக பார்த்துக்கொள்வார்கள். இவர்களின் அதிக அன்பின் காரணமாக வேறு சிலரும் இவர்கள் மீது காதல் கொள்ளும் நிலை ஏற்படலாம். இதனால் இவர்கள் துணையை ஏமாற்றும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
எண் 5
மாதத்தின் 5,14,23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் சாகச உணர்வுகளுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைத்து சந்தோஷங்களையும் அனுபவிக்க வேண்டும் என நினைப்பார்கள்.இவர்கள் எந்த வயதிலும் புதுமையை தேடும் மனம் கொண்டவர்கள். இதனால் துணையை பெரும்பாலும் ஏமாற்றுவார்கள்.