பொதுவாகவே அனைவருக்கும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பணப்பிரச்சினை வாழ்க்கை முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கிறது.

பணப்பிரச்சினை நீங்கி விடாதா?கடன் தொல்லைகள் அனைத்தையும் சரிசெய்துவிட முடியாதா என்ற எண்ணங்களில் தான் நம்மில் பலரும் வாழ்கின்றோம்.

வீட்டில் ஏற்படும் பணப்பிரச்சினையை தீர்க்கணுமா? இதையெல்லாம் பண்ணாதீங்க | Why Do Some People Have Money Problems

இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் வீட்டில் செல்வம் செழிக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில பழக்கங்கள் குறித்து வழியுறுத்தப்படுகின்றது.

வீடுகளில் வாஸ்து தொடர்பாக நாம் செய்யும் குறிப்பிட்ட சில தவறுகளால் தான் பலரும் பணப்பிரச்சினையை எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்றது. அவ்வாறான விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் ஏற்படும் பணப்பிரச்சினையை தீர்க்கணுமா? இதையெல்லாம் பண்ணாதீங்க | Why Do Some People Have Money Problems

வாஸ்து சாஸ்திரத்தின் வீடுகளில் உங்கள் ஆடைகள், செருப்புகள் ஆகியவை ஒழுங்கில்லாமல், வீட்டில் கண்ட இடங்களில் போட்டு வைப்பதால்  எதிர் மறை ஆற்றல்கள் வீட்டை நோக்கி ஈர்க்கப்படும். இதனால் வீட்டில் இருப்பவர்களின் மனம் அமைதியற்று காணப்படும்.

தெளிவாக சிந்திக்கமுடியாது. மேலும் தொழில் ரீதியில் பாரிய பாதக விளைவுகளை சந்திக்க நேரிடும். இதனால் அடிக்க பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

வீட்டில் ஏற்படும் பணப்பிரச்சினையை தீர்க்கணுமா? இதையெல்லாம் பண்ணாதீங்க | Why Do Some People Have Money Problems

வீட்டின் பிரதான நுழைவாயில் இருட்டாக இருந்தால் அது மிகவும் துரதிஷ்டதை ஏற்படுத்துவதாக அமையும். இதனால் லட்சுமி தேவி வீட்டிற்குள் வரமாட்டார். மேலும் லட்சுமியின் கோபத்துக்கு ஆளாக வேண்டி ஏற்படும்.இதனால் வீட்டில் செய்யும் எந்த காரியமும் நல்ல பலனை கொடுக்காது.

குறிப்பாக, நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அந்த துறையில் முன்னேற்றம் ஏற்படாது. பணத்துக்கு எந்நேரமும் தட்டுப்பாடு நிழவும். 

வீட்டில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை முழுமையாக திறந்து வைப்பதும் வீட்டில்  எதிர்மறை ஆற்றல்களை அதிகரிக்க செய்யும்.இதனால் பணப்பிரச்சினை ஏற்படும் என வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.

வீட்டில் ஏற்படும் பணப்பிரச்சினையை தீர்க்கணுமா? இதையெல்லாம் பண்ணாதீங்க | Why Do Some People Have Money Problems

வாஸ்து படி, உங்கள் குளியலறை சமையலறைக்கு எதிரே அல்லது அருகில் அமைந்திருப்பதும் பாதக தாக்கத்தை ஏற்படுத்தும். அது மட்டுமன்றி தெற்கு, தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையிலும் இருப்பதும் பணப்பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமைகின்றது. 

வீட்டு கதவில் ஸ்வஸ்திகா சின்னத்தை வைப்பதனாலும் காலை பூஜையின் போது சங்கு ஊதுவதாலும் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் நீங்குவதுடன் செல்வ செழிப்பு அதிகரிக்கும். இந்த வாஸ்து முறைகளை சரிவர கடைப்பிடிப்பதனால் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.