கொரோனா தொற்று அச்சம் காரணமாக இரண்டு நாட்களாக மூடப்பட்ட நாவலப்பிட்டி நகரம் முழுவதும் ( 17) இன்று தொற்று நீக்கி தெளிக்கப்பட்டது.
கடந்த 15 ஆம் திகதி நாவலப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து அன்றைய தினம் முதல் நாளை 18 ஆம் திகதி வரை நாவலப்பிட்டி நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூட வர்த்தக சங்கம் தீர்மானித்தது
இதனையடுத்து நேற்றைய தினம் (16) நாவலப்பிட்டி நகரம் வெறிச்சோடி காணப்பட்டதுடன் இன்று காலை முதல் நாவலப்பிட்டி நகர சபை, பஸ்பாகே கோரளை சுகாதர வைத்திய காரியாலயம் ஆகிய இணைந்து நகர் முழுவதும் தொற்று நீக்கி தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதே வேளை நாளைய தினம் ( 18 ) திங்கட்கிழமை வழமை போன்று வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் என வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுவரையில் நாவலப்பிட்டி பகுதியில் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நகரத்திற்கு வரும் நுகர்வோர் சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் கடுமையான முறையில் சுகாதார விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.