பொதுவாகவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உலகளாவிய ரீதியில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக ஐஸ்கிரீம் காணப்படுகின்றது.
குறிப்பாக ஐஸ்கிரீம் என்றால் சிறுவர்களுக்கு அலாதி இன்பம். ஆனால் நாம் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமுடன் குறிப்பிட்ட சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அவ்வாறு ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடன் சாப்பிடவே கூடாத உணவு பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடனே தவறியும் டீ அல்லது காபி போன்ற சூடான பானங்களை குடிக்க கூடாது. இவ்வாறு செய்வதனால் வயிற்று வலி மற்றும் வாந்தி போன்ற உடல்நல கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.
ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடன் புளிப்பு சுவை நிறைந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சிட்ரஸ் பழங்களில் அமிலங்கள் நிறைந்திருப்பதால் ஐஸ்கிரீமுடன் இணைந்து வாயு மற்றும் அஜீரண பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடன் சாக்லேட் சாப்பிடுவது பாதக விளைவுகளை ஏற்படுத்தும். சாக்லேட்டில் அதிகளவு காஃபின் நிறைந்திருப்பதால் வயிற்றில் உள்ள ஐஸ்கிரீமுடன் சேர்ந்து செறிமான கோளாறு மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும் வாய்ப்பு காணப்படுகின்றது.
ஐஸ்கிரீம் சாப்பிட பின்னர் ஒருபோதும் ஆல்கஹால் பருகவே கூடாது. அதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் போன்ற பாதக விளைவுகளை ஏற்படுத்தும்.
ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடன் தவறியும் வறுத்த உணவுகளை சாப்பிட கூடாது. காரணம் இதனால் வயிற்றில் பாதகமான இரசாயன எதிர்வினைகள் நிகழ்வதனால் உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கின்றது.