பொதுவாக சமையலில் கறிவேப்பிலையை பயன்படுத்துவதற்கான காரணம் அதன் பிரதான பயன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் சமைக்கும் உணவில் எண்ணெய், நெய் சேர்த்து சமைக்கிறோம். இப்படி சமைக்கும் பொழுது அதில் கொழுப்புச்சத்து அதிகமாக காணப்படும். இது இருதய நலத்தில் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.
அந்த வகையில் நாம் கறியில் கறிவேப்பிலையை சேர்க்கும் பொழுது கொழுப்புச்சத்தை சமனிலைப்படுத்தும். இதனால் இது இருதய செயற்பாட்டிற்கும் நன்மையை தருகிறது.
கருவேப்பிலையில் கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ், விட்டமின்கள் போன்றவை இருக்கின்றன. இந்த சத்துக்கள் உடலுக்கு கிடைப்பதால் தலைமுடி மற்றும் தோல் ஆகியவை பொலிவுடன் இருக்க உதவுகிறது.
பெண்களை பாதிக்கக்கூடிய ரத்த சோகையை இரும்பு சத்தும், ஃபோலிக் அமிலமும் கட்டுப்படுத்தக்கூடியது. கறிவேப்பிலையை கறியில் சேர்த்து சமைக்கும் போது இந்த இரும்பு சத்தும், ஃபோலிக் அமிலமும் சுலபமாக கிடைக்கிறது.
இதனால் இந்த பிரச்சனைகளில் பெண்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். இந்த கறிவேப்பிலையின் பயன்களை பல ஆராய்ச்சிகளின் மூலம் நிருபணம் செய்யப்பட்டிருக்கிறது.
இவற்றை எல்லாம் தவிர உணவு சமைக்கும் போது அதன் சுவையையும் மணத்தையும் மேம்படுத்துகின்றது. இந்த ஏராளமான குணநலனை கறிவேப்பிலை கொண்டுள்ளதால் தான் இதை தவறாமல் கறியில் சேர்த்து சமைக்கின்றனர்.