ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் தங்களின் எதிர்காலம் குறித்து சித்திக்கும் தன்மையுடையவர்களாகவே இருப்பார்கள். எதிர்காலத்தை கருத்தில் கொண்டே மனிதர்கள் சேமிக்கும் பழக்கத்தையும் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் எப்போதும் எதிர்காலம் பற்றிய கவலையே இல்லாமல் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்களாம். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திரமாக இயங்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். உறவுகளில் அதிகமான ஈடுபாடு காட்டாத இவர்கள் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள்.
இந்த ராசியினர் எதிர்காலம் குறித்தது அதிகமாக சிந்திக்க மாட்டார்கள்.குறிப்பாக எந்த விடயம் குறித்தும் அதிகமாக சிந்திக்கவோ கவலைப்படவோ மாட்டார்கள்.
கும்பம்
கும்ப ராசியினர் முற்போக்கான கண்ணோட்டத்துடன் இருப்பார்கள்.இவர்கள் தங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றுபவர்களாக இருப்பார்கள்.
எதையும் முன்கூட்யே எதிர்வுகூறும் திறன் கொண்ட இவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக வாழவே விரும்புகின்றார்கள்.
மிதுனம்
மிதுன ராசியினர் மிகவும் அறிவார்ந்த சிந்தனையுடையவர்களாக இருப்பார்கள்.நிகழ்கால வாழ்க்கை குறித்து அக்கறை கொண்ட இவர்கள் எப்போதும் எந்த விடயம் குறித்தும் அதிகமாக சிந்திக்க மாட்டார்கள்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் கற்பனை உலகில் வாழ்கின்றனர். அவர்களை சுற்றி எத்தனை பிரச்சினை இருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கூடுதலாக எந்த விடயத்திலும் அதிக அக்கறை செலுத்த மாட்டார்கள். நிகழ்காலத்தில் முடிந்தளவு மகிழ்ச்சியாக இருப்பார்கள்.