தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கொட்டைக் காடு மல்லாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மல்லாகம் பகுதியில் வசித்து வரும் சேர்ந்த சூரியகுமார் தேனுஜா(வயது 26) என்ற இளம் யுவதி கடந்த ஒரு மாதமாக தென்னிந்திய சின்னத்திரை நடிகை ஐஸா என்பவரை பார்ப்பதற்கு தன்னை இந்தியா அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார்.
எனினும் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக இப்போது செல்ல முடியாது பின்னர் அழைத்து செல்வதாக பெற்றோர்கள் கூறி வந்த்துள்ளனர்.
இந்நிலையில் தன்னை கூட்டி செல்வதாக தொடர்ந்தும் ஏமாற்றுவதாக கூறி நேற்று முன்தினம் (24) வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார்.
பலத்த தீக்காயத்திற்கு உள்ளான யுவதியை உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேலதிக சிகிசசைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே அவர் உயிரிழந்துள்ளார்.
தென்னிந்திய சினிமா மோகத்தால் யாழ் யுவதிக்கு நேர்ந்த பரிதாபம்
- Master Admin
- 26 May 2020
- (565)

தொடர்புடைய செய்திகள்
- 01 September 2020
- (454)
விவசாயிகளை கட்டியெழுப்பும் நடவடிக்கையில்...
- 06 March 2024
- (257)
முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டில் தவறா...
- 28 March 2025
- (86)
வறுமை நீக்கும் மீனாட்சி அம்மன் வழிபாடு ;...
யாழ் ஓசை செய்திகள்
கனடா ஆசை நிராசையானதால் உயிரை மாய்த்த யாழ் இளைஞன்
- 23 April 2025
இலங்கையில் ஏறுமுகத்தில் டொலர் பெறுமதி!
- 23 April 2025
யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்
- 23 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.