இந்து சாஸ்திரத்தின் அடிப்படியில் அட்சய திருதியை என்பது மிகவும் சிறப்பு மிக்க நாளாக பார்க்கப்படுகின்றது.
அட்சய திருதியை என்பதன் உண்மையான அர்த்தம் வளர்க என்பதாகும். அதனால் தான் அட்சய திருதியை நாளில் எந்த விடயத்தை ஆரம்பித்தாலும் அது மேம்மேலும் உயர்வு கொடுக்கும் என நம்பப்பபடுகின்றது.
அட்சய திருதியை நாளில் நாம் வாங்கும் பொருட்கள் அந்த ஆண்டு ழுழுவதும் சிறந்த பெருக்கத்தை கொடுக்கும் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.
சித்திரை மாதத்தில் சுக்ல பட்சம் 14 வது நாளில் அட்சய திரிதியை கொண்டாடப்படுகின்றது. அட்சயம் என்றால் எடுக்க எடுக்க குறையாத பொருள் என்று அர்த்தம்.
இந்த ஆண்டு மே 10ஆம் திகதி காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் திகதி மதியம் 2:50 மணிக்கு வரை நீடிக்கின்றது.
அட்சய திருதியை நாளில் நகை வாங்க உகந்த நேரம் மே 10 மற்றும் 11 ஆகிய இரு தினமும் காலை 5:33 முதல் மதியம் 12:18 வரை தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை கொடுக்கும்.
அட்சய திருதியை நாளில் பொருட்களை வாங்குவது எந்தளவு அதிர்ஷ்டத்தை கொடுக்கின்றதோ இந்த நாளில் தானம் செய்வதும் சிறந்த பலக்களை கொடுக்கும்.
கஷ்டத்தில் இருக்கும், ஏழை மக்களுக்கு அட்சய திருதியையில் தானம் கொடுப்பதால் வருங்கால சந்ததியினருக்கும் நல்ல பலன் கிடைக்கும் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.
அட்சய திருதியை விஷ்ணு மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகின்றது. இந்த நாளில் தவறியும் அசைவம் சாப்பிடுவது மற்றும் மது அருந்துவதை செய்துவிடாதீர்கள்.
இதனால் லட்சுமியின் கோபத்துக்கு ஆளாவீர்கள். வாழ்வில் தீராத வறுமையை அனுபவிக்க வேண்டி ஏற்படும்.
இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்த நாளில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்த உணவை சாப்பிடக்கூடாது என குறிப்பிடப்படுகின்றது.
இந்த நாளில் தவறியும் வீட்டை அழுக்காக வைத்திருக்க கூடாது. அசுத்தமான இடத்திற்கு ஒருபோதும் லட்சுமி தேவி செல்ல மாட்டார்.
அட்சய திருதியை நாள் விஷ்ணுவுக்கு உகந்த நாள் என்பதால் விஷ்ணுவுக்கு பிடித்த துளசி இலைகளை பறிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் இந்த நாளில் உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குளித்து உடலை சுத்தப்படுத்துவது போல் பொறாமை, கோபம் , பழிவாங்கும் எண்ணத்தை தவிர்த்து உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இந்த நாளில் வாங்கும் தங்கம் அல்லது வெள்ளியை வாங்கியவுடன் அணிந்து கொள்வதை தவிர்த்து பெரியவர்கள் கையால் அர்ச்சனை செய்த பின்னரே அணிய வேண்டும்.
இதனை பின்பற்றினால் தான் அட்சய திருதியை நாளில் லட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற முடியும். இல்லாவிட்டால் வறுமை அதிகரிக்கும் என்பது ஐதீகம்