எண் கணித ஜோதிடத்தின் அடிப்படையில் ஒருவர் பிறந்த திகதிக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கைக்கும் இடையில் தொடர்பு காணப்படுவதை போல் அவர்கள் பிறக்கும் மாதமும் தாக்கம் செலுத்துகின்றது.
அந்த வகையில் மே மாததில் பிறந்தவர்கள் பற்றிய சில சுவாரஸ்யமான விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தங்களை ஊக்கப்படுத் வேறு யாரையும் எதிர்ப்பார்க்க மாட்டார்கள் இவர்களே இவர்களை ஊக்கப்படுத்திக்கொண்டு வெற்றியை நோக்கி செல்லக்கூடிய தன்மை கொண்டவர்கள்.
நினைத்ததை அடைய வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு இயல்பிலேயே ஒரு வசீகர தன்மை இருக்கும். இவர்களை கடப்பவர்கள் திரும்பிப்பார்க்கும் அளவுக்கு நெடியில் ஈர்க்க்கூடிய முகம் மற்றும் கண்களை கொண்டிருப்பார்கள்.
மே மாதத்தில் பிறந்தவர்கள் மற்ற மாதங்களில் பிறந்தவர்களை விட உடல் ஆரோக்கியம் குறித்து அக்கறை செலுத்தகூடியவர்களாக இருப்பார்கள்.
உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுமுறையை பின்பற்றுவதால் அபாயகரமான நோய்களின் தாக்கத்தில் இவர்கள் மாட்டிக்கொள்ள மாட்டார்கள்.
இயல்பாகவே தலைமைத்துவ பண்புகளை கொண்ட இவர்களுக்கு வாழ்வில் நல்ல வேலை, பதவி உயர்வு , சம்பள உயர்வு என்பன அடிக்கடி கிடைக்கும்.
மே மாதத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் எத்தனை தடைகள் வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்களின் லட்சிய பாதையில் பிடிவாதமாக சென்று வெற்றியடைவார்கள்.
இவர்களுக்கு அனைத்து துறைசார்ந்த அறிவும் இருக்கும். எதையும் தெரியாது என சொல்லாமல் தெரிந்துக்கொள்ளலாம் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மே மாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் வார்த்தைகளில் வசீகரத்தன்மை இயல்பாகவே இருக்கும். இவர்களின் பேச்சாற்றலை இவர்களின் எதிரிகளும் கூட விரும்புவார்கள்.
மே மாதம் பிறந்தவர்களுக்கு பச்சை ரத்தினம் பதித்த ஆபரணங்கள் மேலும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இவர்கள் பச்சை ரத்தினம் அணிந்தால் பணத்திற்கு தட்டுப்படு ஏற்படாது.