கிரகங்களுக்கு பெயர்ச்சி உள்ளது. அவை ஒரு நேரத்தில் ஒவ்வொரு ராசியில் மாறக்கூடியவை. இதனால் அனைத்து ராசிகளுக்கும் வக்ரகதி மற்றும் நேர்கதியின் தாக்கம் சமமாக இடம்பெறும்.
அப்படி தான் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் செவ்வாய் வக்ர கதியில் பயணிக்க போகின்றது. இந்த நிகழ்வு டிசம்பர் 7, 2024 அன்று காலை 5:01 மணிக்கு வக்ரகதியில் பயணிக்கத் தொடங்கி, பிப்ரவரி 24, 2025 வரை இந்த நிலையிலேயே இருக்கும்.
செவ்வாயின் வக்ரகதி 12 ராசிகளையும் பாதிக்கும். பஞ்சாங்கத்தின்படி, 29 நாட்களுக்குப் பிறகு செவ்வாய் வக்ரகதியில் பயணிக்கின்றது. அந்த வகையில் இந்த பதிவில் செவ்வாயின் வக்ர பயணத்தால் எந்த ராசிகளுக்கு துன்பம் என்பதை பார்க்கலாம்.
ரிஷபம்
- இந்த செவ்வாய் வக்ர பயணம் உங்களிடம் பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும்.
- உங்களுக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இருக்காது.
- திருமண துணையுடன் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டு இருப்பீர்கள்.
- எதிர்காலத்தில் எண்ணி வைத்த திட்டம் ஒன்றும் பலிக்காது.
- ஏதாவது பழைய முதலீடு இருந்தால் அதில் நல்ல லாபம் கிடைக்காது.
கடகம்
- இனிவரும் காலங்கள் உங்களுக்கு சாதகமாக அமையாது.
- எந்த வேலையிலும் முக்கிய ஒப்பதங்கள் உங்கள் பக்கம் வராது.
- நீங்கள் இந்த கால கட்டத்தில் அவ்வளவாக பழக்கம் இல்லாதவர்களுக்கு கடன் கொடுக்க கூடாது.
- வாழ்க்கை துணையுடன் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
மீனம்
- உங்களது நிதி நிலமை பலவீனமடையும்.
- பல சொத்துக்களை நீங்கள் வாங்குவீர்கள் ஆனால் இது நல்லதல்ல.
- இந்த காலகட்டத்தில் நீங்கள் சொந்த தொழிலை இழக்க நேரிடும் அளவிற்கு பிரச்சனை வரும்.
- குடும்பத்தின் நிலை மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கும்.
- உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம்.