முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவைக்கு அடிமையானவர்கள் பலர், நார்ச்சத்து அதிகம் நிறைந்த மாம்பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன.

விட்டமின் ஏ, பி6, சி மற்றும் இ நிறையவே உள்ளன, இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இப்பழம் செரிமானத்திற்கு உகந்தது.

மாம்பழத்தில் உள்ள தாமிரம் ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும்.

Mango Peel Tea: மாம்பழத் தோல் டீ-ன் ஆரோக்கிய நன்மைகள் | Mango Peel Tea Benefits In Tamilமாம்பழம் மட்டுமின்றி அதன் தோலிலும் நன்மைகள் உண்டு, இதன் தோலை தூக்கி எறியாமல் டீ போட்டு குடிக்கலாம், ஏனெனில் இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது.

தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மாம்பழத் தோல்களை போட்டு இறக்கிய பின்னர் தேன் சேர்த்தால் மாம்பழ தோல் டீ தயாராகிவிடும்.

இதில் பல ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்திருக்கின்ற்ன, விட்டமின் சியும் நிறைந்தது, இதில் உள்ள மாங்கிஃபெரின் என்ற கூட்டுப்பொருள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.

எனினும் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னரே சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்வது அவசியம்.