ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவரின் எதிர்காலத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அது மட்டுமன்றி ஒருவருடைய ஆளுமை மற்றும் விசேட பண்புகளிலும் கூட ராசி நட்சத்திரத்தின் தாக்கம் நிச்சயம் இருக்கும்.
அந்த வகையில் குறிப்பிட்ட சிலர் பிறப்பிலேயே அதீத அறிவாளிகளாகவும் கல்வி கற்பதில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் புத்திகூர்மையுடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் கடின உழைப்பின்றி எளிமையாகவே கல்வியில் உயர் நிலையை அடைவார்கள்.
எந்த சூழ்நிலையிலும் விரைவாக முடிவெடுக்கும் திறன் இவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். கல்வி ரீதியில் குடும்ப மரியாதை இவர்களால் மேம்படும்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே எதையும் விரைவாக கற்றுக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.
இவர்ககள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள். எதையும் மிகவும் எளிமையாக கையாளும் தன்மை கொண்ட இவர்கள் கல்வி கற்பதில் வல்லவர்கள் என்றே கூறவேண்டும்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே நினைவாற்றல் அதிகமாக இருக்கும்.இவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பதனால் வெற்றி இவர்களை தேடி செல்லும்.
எந்த விடயத்திலும் முன்னிலையில் இருக்க வேண்டும் என்றும் வெற்றியடைய வேண்டும் என்றும் தங்களுக்குள்ளேயே அதிகமாக சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.
அவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகமாக இருக்கும். பொது விடயங்கள் குறித்த அறிவு இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.