அமெரிக்காவில், மிச்சிகனில் இரண்டாவது முறை பெற்றோராகப்போவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ஒரு தம்பதியர்.
ஆனால், Alyson மற்றும் Phil என்ற அந்த தம்பதியினர் தங்கள் குழந்தையின் ஸ்கேனை பார்த்தபோது, பதறிப்போனார்கள்.
காரணம், Alyson வயிற்றில், மார்பிலிருந்து வயிறு வரை இணைந்திருந்த இரட்டைக் குழந்தைகள் இருந்தார்கள்.
ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சத்தில் ஒருவருக்குத்தான் இப்படி இருக்கும், நீங்கள் என்ன முடிவு செய்யப்போகிறீர்கள் என்று பெற்றோரைக் கேட்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
இரண்டு அழகான குழந்தைகள், இப்போதே இப்படி ஒட்டிக்கொண்டிருக்கின்றனவே, அவை பிறந்தாலும் ஒருவர் மீது ஒருவர் அன்பைப் பொழியத்தான் போகின்றன என்று கூறி, குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதென முடிவு செய்திருக்கிறார்கள் பெற்றோர்.
கர்ப்பகாலத்தின் 25ஆவது வாரத்தில் ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. ஆம், அந்த குழந்தைகளின் இதயங்கள் ஒட்டியிருக்கவில்லை, இரண்டு குழந்தைக்கும் ஆளுக்கொரு இதயம் இருக்கிறது, அதாவது, அவர்களை பிரித்தாலும், அவர்கள் உயிர் வாழ சாத்தியம் இருக்கிறது என்ற செய்தி கிடைத்துள்ளது.
33ஆவது வாரத்தில், குழந்தைகளுக்கு தாயிடமிருந்து தொப்புள் கொடி வழியாக செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதை கவனித்த மருத்துவர்கள், சிசேரியன் அறுவை சிகிச்சை முறையில் Sarabeth மற்றும் Amelia என்னும் அழகான இரு பெண் குழந்தைகளை உலகுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஒரு வயதில் இணைந்திருந்தவர்கள், தங்கள் இரண்டாவது பிறந்தநாளின்போது தனித்தனியாக இருக்கும் வகையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று அறுவை சிகிச்சை முறையில் இரண்டு குழந்தைகளும் தனித்தனியாக பிரிக்கப்பட்டாலும், அந்த குழந்தைகளின் அன்பை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணலாம்.