சுட்டெரிக்கும் வெயிலில் திரியும் போது சருமம் மிகவும் மோசமாக கருமை அடைகின்றது. இந்த கருமையை போக்க பல வழிகளில் இரசாயன அழகுப்பொருட்களை பாவனை செய்கின்றோம்
இதை அனைத்தையும் தவிர்த்து வீட்டில் உள்ள சில சில பொருட்களை வைத்து நாம் நமது அழகை மெருகூட்டலாம்.
அந்த வகையில் கொரியன் மற்றும் தாய்லாந்து பெண்கள் எவ்வாறு தங்களை அழகுபடுத்துகிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சருமத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்க தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை பேஸ்ஸ்ட் போல செய்து இதை முகத்தில் போட்டு உலரவிட்டு கழுவி விட வேண்டும்.
இதை தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பிரகாசமாகவும் சருமத்தில் எந்த வித அழற்சியும் ஏற்படாமல் ஜொலிக்கும். காபி பவுடரில் ஆலிவ் எண்ணை கலந்து உடல் முழுவதும் பூசி வந்தால் மேனி மழுவதும் ஒரே நிறத்தில் அழகாக தெரியும்.
இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டதாகும். ஷீட் மாஸ்க் இது சருமத்திற்கு நல்ல ஈரப்பதம் மற்றும் ஊட்டத்தை வழங்கும். இதில் கொஞ்சம் நீர் தெளித்து முகத்தில் மாஸ்க் போல போட வேண்டும்.
ஆர்கான் எண்ணெய் ஸ்கின் கேர், ஹேர் கேரில் பலவித நன்மைகளை வழங்குகின்றன.
இதில் இருக்கும் வைட்டமின் இ சத்து உங்கள் முகம், முடி, நகங்களை வறண்டு போகாமல் பாதுகாத்து, ஈரப்பதத்துடன், செழுமையாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது.
மிகவும் பிரபலமான மூலிகைகள் நிறைந்த மசாஜ் பால்ஸ்சைப் பயன்படுத்தலாம். இதை முகத்தில் மசாஜ் செய்துவந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள், தழும்புகள் உள்ளிட்டவை வேகமாக மறையும்.