கோடை காலம் தொடங்கிவிட்டது, பழச்சாறுகள், இளநீர், மோர் என கோடை வெயிலின் தாகத்தை குறைக்க மக்கள் இவற்றை நாடுவருகின்றனர்.
இந்த பதிவில் இளநீர் சர்பத் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
இளநீர்- 2
கடல்பாசி - ஒரு கைப்பிடி
சர்க்கரை- 200 கிராம்
கன்டன்ஸ்டு மில்க்- 3 டீஸ்பூன்
பால் - அரை லிட்டர்
சப்ஜா விதை- ஒரு டீஸ்பூன்
முதலில் சப்ஜா விதைகளை நீரில் போட்டு ஊறவைத்துக்கொள்ள வேண்டும், ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி அதில் கடல்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இந்த கலவையை பிரிட்ஜில் ஊற்றி ஒருமணிநேரம் வைக்க வேண்டும், ஜெல்லி பதத்திற்கு வந்தவுடன் சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அப்போது ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பாலை ஊற்றி, அதில் கன்டன்ஸ்டு மில்க், ஊறவைத்த சப்ஜா விதை, இளநீரில் ஜெல்லி போன்றவற்றை சேர்க்க வேண்டும்.
இதனை பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியானதும் பரிமாறலாம்.