பிரித்தானியாவில் தனியாக நடந்துசெல்லும் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

அவ்வகையில், லண்டனில் தனியாக நடந்துசென்ற கர்ப்பிணிப்பெண் ஒருவர் தாக்கப்படும் CCTVகமெரா காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மர்ம நபர் ஒருவர், 27 வார கர்ப்பிணியான ஒரு பெண்ணின் தலையை தலையணை உறை ஒன்றால் மூடிவிட்டு, அந்த பெண்ணின் வயிற்றில் மாறி மாறி குத்தும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

வட லண்டனிலுள்ள Stamford Hill என்ற இடத்தில் இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது.

CCTVகமெரா காட்சி

CCTV கமெரா காட்சிகளை வெளியிட்டு பொலிசார் அந்த நபரைத் தேடி வருகிறார்கள்.

ஒரு பக்கம் பிரித்தானியாவில் தனியாக வரும் பெண்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடரும் நிலையில், இந்த கர்ப்பிணிப்பெண் ஒரு யூத பெண் என்பதால், அது யூதர்கள் மீதான இனவெறித் தாக்குதலா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.