நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 715 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 698 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களில் 59 ஆயிரத்து 43 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 6 ஆயிரத்து 325 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.