பொதுவாகவே உலகில் காபி, டீ குடிக்காதவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. காபியை பொருத்தவரையில் டீ தூளுடன் ஒப்பிடும் போது சற்று விலை அதிகம்.

இதனால் அதிகமானோர் டீயை தான் தெரிவு செய்கின்றனர். உலகில் பெரும்பாலானோரால் விரும்பப்படும் பானமாக டீ காணப்படுகின்றது என்றால் மிகையாகாது.

டீ தூளின் விலை கோடி ரூபாய்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? | Worlds Most Expensive Tea Da Hong Prizeகாலையில் எழுந்தவுடன் டீ யில் தான் நாளே ஆரம்பிக்கிறது என கூறுபவர்கள் ஏறாளம். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருள் என்பதால் குறைவான விலையில் கிடைக்கிறது.

ஆனால் உலகில் விலை உயர்ந்த டீ எது தெரியுமா? அந்த டீயில் அப்படி என்ன இருக்கிறது? எப்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகில் மிகவும் விலை உயர்ந்த டீயாக பார்க்கப்படுவது டா ஹோங் போ எனப்படும் சீன நாட்டில் பயிரடப்படும் ஒரு வகை தேயிலையாகும்.

டீ தூளின் விலை கோடி ரூபாய்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? | Worlds Most Expensive Tea Da Hong Prize

இந்த தேயிலைகள் தான் உலகில் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த டீ ஒரு கிலோ 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சீனாவின் ஃபுஜைன் அருகே உள்ள உய்ஷன் என்ற பகுதியில் இந்த தேயிலை பயிரிடப்படுகின்றது. இந்த தேயிலையில் பல நன்மைகள் செய்யும் சத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த தேயிலை உயிரை காக்கும் தன்மை கொண்டது எப்பதால்.  இதை உயிர் கொடுக்கும் தேயிலை எனவும் அந்நாட்டில் அழைக்கிறார்கள். இந்த டீயை அருந்துபவர்களுக்கு பல்வேறு விதமான வியாதிகள் குணமாவதாக கருதப்படுகிறது.

டீ தூளின் விலை கோடி ரூபாய்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? | Worlds Most Expensive Tea Da Hong Prize

இந்த வகை தேயிலை மிகக்குறைந்த அளவிலேயே பயிர் செய்யப்படுகிறது. அதனாலேயே இந்த டீ உலகில் மிகவும் அரிதான பொருளாக பார்க்கப்படுகின்றது.

இந்த டீ பயிர் செய்வதில் பல சிறப்பான விடயங்கள் கையாளபப்படுவதாகவும் அதனை பயிரிட கடின உழைப்பும் தீவிர கவனமும் தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சீனாவின் மிங் ஆட்சி காலத்தில் இந்த டா ஹோங் போ டீ பயிர் செய்யப்பட்டுள்ளதற்கான சாட்சிகள் உள்ளன. மிங் ஆட்சி காலத்தில் ஆட்சி செய்த ராணி ஒருவர் திடீரென உடல் நிலை மோசமான நிலைக்கு சென்றுவிட்டார்.

டீ தூளின் விலை கோடி ரூபாய்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? | Worlds Most Expensive Tea Da Hong Prize

ராணியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக சென்றது அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருந்தது. ராணிக்கு எல்லாவிதமான மருந்து கொடுத்து எந்த மருந்தும் ராணிக்கு பலனை தரவில்லை.

இந்நிலையில் தன் கடைசி கால ஆசைகளில் ராணி தனக்கு டா ஹோங் போ டீ பருக வேண்டும் என கூறியுள்ளார். அதன் படி அவருக்கு அந்த டீ தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது.

அதனால்  ராணி மரணப்படுக்கையில் இருந்து மீண்டு எழுந்தார். அவர் மரணப்படுக்கையிலிருந்து மீண்டதும் மகிழ்ச்சியடைந்த ராஜா அந்நாட்டில் அந்த வகை தேயிலையை தொடர்ந்து பயிர் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

டீ தூளின் விலை கோடி ரூபாய்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? | Worlds Most Expensive Tea Da Hong Prize

அந்த ராஜா தான் இந்த தேயிலை வகைக்கு  டா ஹோங் போ என பெயரிட்டார். அதுதான் அந்த டீ தொடர்ந்துபயிர் செய்வதற்கான துவக்கமாக கருதப்படுகிறது முன்னாதாக சிலர் இந்த வகை டீயை பயிர் செய்து வந்துள்ளனர்.

தற்காலத்தில் இந்த வகை டீயை அந்த குறிப்பிட்ட மலைப் பகுதியை தவிர வேறு எங்கும் பயிர் செய்ய முடியவில்லை அதனால் தான் இந்த டீக்கு விலை இந்தளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றும் இந்த வகை தேயிலை சில கிராம்களை பல லட்சம் கொடுத்து வாங்குபவர்கள் இருக்கின்றார்கள்.

டீ தூளின் விலை கோடி ரூபாய்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? | Worlds Most Expensive Tea Da Hong Prize

சீன அரசாங்கம் இந்த தேயிலையை அவ்வப்போது ஏலம் விடுவதும் வழக்கம். சீன அரசாங்கத்தை பொருத்தவரையில் இது பொக்கிஷமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.