பொதுவாகவே அனைவருக்கும் மன உறுதியும் தன்னம்பிக்கையும் இருக்கும். ஆனால் ஒரு சிலர் சற்று அசாதாரணமாக எந்த சூழ்நிலைக்கும் அஞ்சாதவர்களாகவும் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலை உடையவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களுக்கு எல்லோருக்கும் இருப்பது போல் பயம், பதட்டம் என அனைத்தும் இருந்தாலும், அதை கட்டுக்குள் வைத்துக்கொள்வதில் இவர்கள் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறித்த சில ராசியை சேர்ந்த பெண்கள் பயம் என்ற நாமமே அறியாதவர்களாக இருக்கின்றனர்.இப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசி பெண்கள் எந்த நேரத்திலும் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள பயப்பட மாட்டார்கள். தனக்கு சரி என தோன்றுவதை கொஞ்சமும் தயக்கமின்றி பேசிவிடுவார்கள்.
நினைத்த விடயத்தை அடைவதற்காக எந்த எல்லைக்கும் சென்று போராட கூடியவர்கள். இவர்கள் பயம் என்றால் என்ன என்பதை உணராதவர்கள் போல் நடந்துக்கொள்வார்கள்.
சிம்மம்
இந்த ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த ஒருபோதும் அச்சப்படுவது கிடையாது. எப்போதும் எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள்.
தனுசு
இந்த ராசி பெண்களிடம் சாகச மற்றும் உண்மையைத் தேடும் இயல்பு இயற்கையாகவே இருக்கும். அவர்கள் தங்கள் அறிவாற்றலையும் மனதில் தோன்றும் விடயங்களையும். அச்சமின்றி வெளிப்படுத்துகிறார்கள்.
கும்பம்
கும்ப ராசியினர் எப்போதும் முற்போக்கான சிந்தனையுடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் புதுமையான யோசனைகளையும் நம்பிக்கைகளையும் அச்சமின்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.
எந்த சூழ்நிலைக்கும் அஞ்சாதவர்களாக இருப்பார்கள். இவர்களின் இந்த குணத்தால் மற்றவர்களால் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர்.