மே மாதம் 11 ஆம் திகதி முதல் நாட்டில் வழமையான செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பிலான வழிமுறைகள் தற்போது ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி கல்வியமைச்சுக்கான சுகாதார வழிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நிலவும் தொற்று நோய் அச்சுறுத்தல் மற்றும் நாடு முகங்கொடுத்துள்ள நிலமையை நோக்கும் போது, பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான உரிய சூழல் ஏற்படவில்லை என அவர் கல்வியமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

முன்னதாக எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டிலுள்ள பாடசாலைகளது கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.