பொதுவாகவே உலகில் ஒவ்வொரு மனதனுக்கும் ஒவ்வொரு சிறப்பு மற்றும் தனித்திறமை நிச்சயமாக இருக்கும்.
ஒவ்வொருவரும் அடையாளமத்தையும் தனிப்பட்ட குணாதிசயங்களையும் பண்புகளையும் வெளிப்படுத்துகின்றனர்.
நாம் எந்த ராசியில் பிறக்கின்றோமோ அதன் அடிப்படையில் தான் நமது குணவியல்புகளும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் அழகான சிரிப்புபை கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியினர் இயல்பாகவே தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள் எல்லா சூழ்நிலையிலும் நேர்மறையாக நடந்துக்கொள்வார்கள்.
இவர்களின் நேர்மையால் முகம் ஜொலிக்கும் மேஷ ராசியில் பிறந்தவர்களின் சிரிப்பு மிகவும் வசீகரமானதாக இருக்கும்.
மிதுனம்
இந்த ராசியில் பிறந்தவர்கள் மிகவும் விளையாட்டு தனமாக இருப்பார்கள். இவர்களின் உள்ளம் எப்போதும் மகிழ்ச்சியை நோக்கியே சிந்திக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.
இவர்களின் புன்னகை அனைவரையும் தன்வசப்படுத்தும் அளவுக்கு மிகவும் ஈர்ப்பு நிறைந்ததாக இருக்கும்.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினரின் முகம் எப்போதும் பிரகாசமானதாக இருக்கும்.
தன்னம்பிக்கை மற்றும் காந்த ஒளியுடன், சிம்ம ராசியினர் தங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகை பெற்றிருப்பார்கள். இவர்களின் சிரிப்பை மந்திர புன்னகை என்றே கூறலாம்.
சிரிப்பால் அனைவரையும் கவரும் தன்மை இவர்களிடம் கட்டாயம் இருக்கும்.
துலாம்
துலாம் ராசியினர் இனிமையான மற்றும் மயக்கும் சிரிப்பை கொண்டிருப்பார்கள்.
எப்போதும் அமைதியை விரும்பும் இவர்களின் சிரிப்பு பார்பவர்களுக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் தன்மையில் அமைந்திருக்கும்.