பொதுவாகவே அனைவருக்கும் எல்லா செல்வ செழிப்புகளையும் பெற்று மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடனும் வாழ வேண்டும் என்று தான் ஆசை.

ஆனால் பெரும்பாலன குடும்பங்களுக்கு இது ஒரு சவாலான விடயமாகவே காணப்படுகின்றது. இதை தான் ஔவையாரும் கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடுமை இளமையில் வறுமை என அனுபவித்து கூறியுள்ளார்.

கேட்டதை கொடுக்கும் அதிசய தீபம்! இந்த தீபத்தை ஏற்றினால் போதும் தீராத பண கஷ்டம் கூட தீரும் | Lakshmi Deepam Worship For Attract Money

உண்மையில் வறுமை என்பது மிகக் கொடிய நோயைப் போன்றது. இதன் வலியும் வேதனையும் அடுத்த வேளை என்ன செய்வது என்று புரியாத நிலையில் வாழுபவர்களுக்கு தான் தெரியும்.

 இன்றளவும் பல குடும்பங்கள் பொருளாதார சூழ்நிலையில் பின் தங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இல்லாமல் இருக்கிறார்கள்.

கேட்டதை கொடுக்கும் அதிசய தீபம்! இந்த தீபத்தை ஏற்றினால் போதும் தீராத பண கஷ்டம் கூட தீரும் | Lakshmi Deepam Worship For Attract Money

இந்த நிலை மாறி வீட்டில் செல்வம் கொழிக்க  எளிமையான லக்சுமி தீப வழிபாடு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வெற்றிலை

அகல் தீபம்

வெண்கலதட்டு    

பசு நெய்

மஞ்சள் திரி

சிறிதளவு கற்கண்டு

தீபம் ஏற்றும் முறை 

இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் லட்சுமி தேவி சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் தான் ஒவ்வொரு வீட்டிற்கும் படியளப்பார் என நம்பப்படுகின்றது.

கேட்டதை கொடுக்கும் அதிசய தீபம்! இந்த தீபத்தை ஏற்றினால் போதும் தீராத பண கஷ்டம் கூட தீரும் | Lakshmi Deepam Worship For Attract Money

எனவே இந்த நேரத்தில் லட்சுமி தேவியை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் வழிபாடு செய்தால் வீட்டில் செல்வத்திற்கு பஞ்சமே வராது என்பது ஐதீகம்.

வீட்டின் முன் கதவின் நிலை வாசலுக்கு உள்ளே தான் இந்த தீபத்தை ஏற்றிவைக்க வேண்டும். முதலில் ஒரு சுத்தமாக வெண்கல தட்டில் வெற்றிலையை மஞ்சள் குங்குமம் தடவி வைத்துக்கொள்ள வேண்டும்.

கேட்டதை கொடுக்கும் அதிசய தீபம்! இந்த தீபத்தை ஏற்றினால் போதும் தீராத பண கஷ்டம் கூட தீரும் | Lakshmi Deepam Worship For Attract Money

பின்னர் அந்த வெற்றிலையின் மேல் ஒரு அகல் விளக்கை வைத்து பசு நெய் ஊற்று மஞ்சள்  திரியால் விளக்கேற்றி வைக்க வேண்டும்.

விறக்கேற்றிய பின்னர் லட்சுமி தேவிக்கு நெய்வேத்தியமாக சிறிதளவு டயமண்ட் கற்கண்டை இந்த வெற்றிலையின் மேல் வைத்து விட வேண்டும்.

மஞ்சள் திரி கிடைக்காத பச்சத்தில் சாதாரண திரியை சிறிதளவு தண்ணீர் அல்லது பண்ணீரில் முக்கி அதனை மஞ்சள் தூள் பூசி நிழலில் காயவிட்டு எடுத்தால் மஞ்சள் திரி தயாராகிவிடும்.

கேட்டதை கொடுக்கும் அதிசய தீபம்! இந்த தீபத்தை ஏற்றினால் போதும் தீராத பண கஷ்டம் கூட தீரும் | Lakshmi Deepam Worship For Attract Money

இந்த விளக்கை தொடர்ச்சியாக 48 நாட்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அதனை வீட்டில் உள்ள சுமங்கலி பெண்கள் செய்வதே சிறப்பு.

48 நாட்களில் பெண்களால் ஏற்ற முடியாத பட்சத்தில் வீட்டில் உள்ள ஆண்களும் ஏற்றலாம். ஆனால் 48 நாட்கள் தொடர்ச்சியாக இந்த வழிபாட்டை செய்யும் போதே இதன் பலன் முழுமையாக கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த லட்சுமி தீப வழிபாட்டை மேற்கொள்வதால் வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். லட்சுமியின் அருள் முழுமையாக கிடைக்கும்.