பொதுவாக அனைவருமே தங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் தங்கள் சொல்வதை கேட்க வேண்டும் எனவும் நினைப்பது மிகவும் சாதாரணமான விடயம் தான்.
ஆனால் அவ்வாறான ஒரு துணை கிடைப்பது தான் அசாத்தியமானது. மனதுக்கு பிடித்தவரை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவது சுலபமான விடயம் கிடையாது.
அப்படி மாற்ற வேண்டும் என நினைத்தால் அதனை அதிகாரத்தால் ஒரு போதும் செய்யவே முடியாது என்பது உறுதி. இதற்கு முதலில் எந்தவிதமான எதிர்ப்பார்ப்பும் அற்ற தூய்மையான அன்பு முக்கியம்.
இவ்வாறு நீங்கள் உண்மையான அன்பு வைத்திருந்தால் அதை உங்கள் துணை புரிந்துக்கொள்ளும் வகையில் வெளிப்படுத்தினால் கணவன் மனைவிக்கு இடையில் பெரிதாக கருத்து வேறுப்பாடுகள் வராது.
இருப்பினும் காதல் உறவாக இருந்தாலும், திருமண உறவாக இருந்தாலும் அந்த உறவில் சண்டை ஏற்படுவது இயல்பான விடயம் தான்.
சண்டைகள் ஏற்படும் போது உறவில் விரிசல் வந்துவிட்டதாகவும் பிரிவு வந்துவிட்டதாகவும் தான் பலரும் நினைக்கின்றார்கள்.உண்மையில் சண்டைகள் ஏற்படும் போது தான் இருவருக்கும் இடையில் புரிதலே ஆரம்பிக்கின்றது.
கணவன் மனைவிக்கு இடையில் சண்டைகள் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் சண்டையின் போது நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் சமயங்களில் நமது அன்புக்குரியவர்களை மனதளவில் பாதித்துவிடும்.
துணையுடன் ஏற்படும் சண்டைகளின் போது, நாம் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளால் சண்டையை முடிக்கவும் முடியும் பெரிதாக்கவும் முடியும்.
இது நாம் தேந்தெடுக்கும் வார்த்தைகளிலேயே தங்கியுள்ளது. கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சண்டைகளின் போது குறைகளை ஏற்கனவே நடந்த விடயங்கள் தொடர்பில் பேசாமல் இருப்பது இலகுவாக சண்டையை முடிவுக்கு கொண்டுவரும்.
எனவே துணையடன் வாக்குவாதம் ஏற்பட்டால் யாருடைய குறைகளையும் அந்த நேரத்தில் சுட்டிக்காட்டுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
சண்டையின் போது, "அமைதியாக இரு" என்று சொல்வது மற்ற நபரின் உணர்வுகளை புன்படுத்தும் வகையில் இருக்கும்.
இதனால், அவர்கள் தனது உணர்ச்சிகள் தேவையற்றவை அல்லது பகுத்தறிவற்றவை போல இருப்பதாக உணர்வார்கள் எனவே இந்த வார்த்தையை சண்டையின் போது தவறியும் பாவிக்காதீர்கள்.