மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்ட 50 கைதிகளுக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது 11 கைதிகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் சொத்துக்களை சேதப்படுத்தியமை கலகம் செய்தல் மற்றும் சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்த 12 கைதிகள் பெப்ரவரி 08 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.