பொதுவாக தற்போதைய காலத்தில் கணினி முன் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

நாம் தொடர்ச்சியாக கணினியை பயன்படுத்தும் போது ஏகப்பட்ட பக்க விளைவுகளை சந்திக்க வேண்டிய ஒரு நிலை கட்டாயமாக வரும்.

மேலும் கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வதால் ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

அந்த வகையில், நாம் பார்ப்பதற்காக பயன்படுத்தும் கண்கள் கணினியிலிருந்து வரும் கதிர்வீச்சால் வேகமாக களைப்படைகின்றன. இதனால் கண்களில் வறட்சி ஏற்பட்டு, சிவப்பு நிறமடைவது, எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இப்படியான பிரச்சினைகளை எப்படி கட்டுபடுத்துவது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

திடீரென கண்களில் வறட்சி ஏற்பட இதுவும் ஒரு காரணமாகலாம்.. தெரிஞ்சிக்கோங்க | Are Your Eyes Dry Then Do This

1. நாம் ஒவ்வொரு நாளும் பல விடயங்களை கண்களால் பார்க்கிறோம். அதனால் கண்கள் சோர்வடைந்து கண்கள் சிவத்தல் அரிப்பு மற்றும் எரிச்சல்  போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதை தடுப்பதற்கு குளிர்ந்த நீரை எடுத்து அதில் உங்கள் கண்களை கழுவினால் இந்த பிரச்சனை குறையும்.

திடீரென கண்களில் வறட்சி ஏற்பட இதுவும் ஒரு காரணமாகலாம்.. தெரிஞ்சிக்கோங்க | Are Your Eyes Dry Then Do This

2. நீண்ட நேரம் கணணியைப்பார்த்து வேலை செய்பவர்கள் கண்களுக்கு அடிக்கடி  இடைவேளை கொடுக்க வேண்டும். இந்த ஓய்வு நேரத்தில் கண்களை அங்கும் இங்கும் சிமிட்டி பயிற்சி செய்ய வேண்டும். பின்னர் கண்களை கொஞ்ச நேரத்திற்கு மூடி வைக்க வேண்டும்.

திடீரென கண்களில் வறட்சி ஏற்பட இதுவும் ஒரு காரணமாகலாம்.. தெரிஞ்சிக்கோங்க | Are Your Eyes Dry Then Do This

3. கண்களில் சோர்வு, எரிச்சல், வறட்சி போன்றவை ஏற்பட்டால் கண்களில் குளிர்ச்சியான பொருட்களை வைக்க வேண்டும். அந்த வகையில் வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி கண்களில் சிறிது நேரம் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இது போன்ற பிரச்சனைகள் வராது.

திடீரென கண்களில் வறட்சி ஏற்பட இதுவும் ஒரு காரணமாகலாம்.. தெரிஞ்சிக்கோங்க | Are Your Eyes Dry Then Do This

4. கண்களில் கொஞ்சம் ரோஸ் வாட்டர் விட வேண்டும். இப்படி விடுவதால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படும். கண்கள் வறட்சி அடையாமல் இருக்கும்.

திடீரென கண்களில் வறட்சி ஏற்பட இதுவும் ஒரு காரணமாகலாம்.. தெரிஞ்சிக்கோங்க | Are Your Eyes Dry Then Do This

இந்த வழிகளை அதிக நேரம் டிவி பார்ப்பவர்கள் மற்றும் கணணி பயன்னடுத்துபவர்கள் முக்கியமாக பின்பற்ற வேண்டும்.