பொதுவாக திருமணமான தம்பதிகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று தான் கருத்தரிப்பு தாமதம்.

கருத்தரிப்பு தாமதம் பல்வேறுப்பட்ட காரணங்களால் ஏற்படலாம்.

இது போன்ற பிரச்சினை இருப்பவர்கள் முறையான மருத்துவ ஆலோசனைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை இவை இரண்டையும் சரியாக கடைபிடிக்கும் போது கருத்தரிக்க வாய்ப்பு இருக்கின்றது.

திருமணமாகி 1 வருடம் கடந்து விட்டதா? புது வருடத்தில் ஏதாவது நற்செய்தி எதிர்பார்க்கிறீர்களா? அப்படியாயின் தம்பதிகள் சில மாற்றங்களை வாழ்க்கையில் செய்ய வேண்டும்.

சீக்கிரம் கருத்தரிக்க என்ன செய்ய வேண்டும்? தம்பதிகள் தெரிஞ்சிக்கோங்க | Pregnancy Parenting Tips In Tamilஅந்த வகையில் 2024 ஆம் ஆண்டு குழந்தைப்பேறை பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கும் தம்பதியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து பார்க்கலாம்.

1. மருத்துவ பரிசோதனை​

  • உடல் பரிசோதனை
  • இரத்த பரிசோதனை
  • மரபணு ஆலோசனை
  • குறித்த விஷயங்கள் மருந்துகள் தடுப்பூசிகள்
  • கருவுறுதலுக்கு முந்தைய பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள்
  • பால்வினை நோய்கள் பரிசோதனை
  • வயது காரணத்தால் கருவுறுதல் பாதிப்பு இருந்தால் அது குறித்த தீர்வுகள்.

சீக்கிரம் கருத்தரிக்க என்ன செய்ய வேண்டும்? தம்பதிகள் தெரிஞ்சிக்கோங்க | Pregnancy Parenting Tips In Tamil

உடற்பயிற்சி

பொதுவாக தினமும் உடற்பயிற்சி செய்வதால் இதயம், நுரையீரல் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆரோக்கியம் பெறும். எடை அதிகரிப்பு காரணமாக கஷ்டப்படுவர்கள் உடற்பயிற்சியால் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.

அதிக எடை பிரச்சினையுள்ளவர்களுக்கு கருத்தரிப்பு தள்ளிப்போக வாய்ப்பு இருக்கின்றது. இதனால் எப்போதும் உடலை ஆரோக்கியமாக பார்த்து கொள்வது அவசியமாகும்.

நாளொன்றுக்கு 30 முதல் 60 நிமிடங்கள் வரை தீவிரமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது மலட்டுத்தன்மை அபாயத்தை குறைத்து கருவுறுதலை மேம்படுத்துகின்றது.

சீக்கிரம் கருத்தரிக்க என்ன செய்ய வேண்டும்? தம்பதிகள் தெரிஞ்சிக்கோங்க | Pregnancy Parenting Tips In Tamil

 

அப்படியாயின்,

ஏரோபிக்ஸ், நடைப்பயிற்சி , ஓடுவது இப்படி அதிகமான உடலுக்கு உழைப்பு கொடுக்க வேண்டும். இது கருவுறுதலை விரைவுப்படுத்த செய்வதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

குழந்தையில்லை என மன அழுத்தத்தினால் இருப்பவர்களுக்கு குழந்தை இல்லாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. இதனை சரிச் செய்ய வேண்டும் என்றால் ஆழ்ந்த சுவாசம், தியானம் மற்றும் யோகா பயிற்சிகளை மேற்க் கொள்ளலாம்.

தூக்கம்

மனிதர்களுக்கு பொதுவாக தூக்கம் அவசியம். கருத்தரிப்பு தள்ளிப்போவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். நீண்ட கால உடல்நல பிரச்சனைகளால் தூக்கமில்லை என்றால் அது வேறு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

தூக்கமின்மையால் ஹைபோதாலமிக் பிட்யூட்டரி சுரப்பி செயல்படுத்துதல் மற்றும் சர்க்காடியன் போன்றவை இனப்பெருக்கத்தில் தலையிடலாம் என ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீக்கிரம் கருத்தரிக்க என்ன செய்ய வேண்டும்? தம்பதிகள் தெரிஞ்சிக்கோங்க | Pregnancy Parenting Tips In Tamil

அத்துடன் இரவு நேர பணியில் இருப்பவர்கள் கருசிதைவுகளை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது.

மோசமான தூக்கம் அதிக எடை அதிகரிக்க செய்யும். ஆண்களின் அதிக எடை , உடல் பருமன் போன்றவை விந்தணு ஆரோக்கியத்தை பாதிக்கும்.