பொதுவாகவே அனைவருக்கும் நீச்சல் குளத்தில் குளிப்பது மிகவும் பிடித்தமான விடயமாக இருக்கும். சிறியவர்கள் மாத்திரமன்றி பெரியவர்களும் கூட நீச்சல் குளத்தில் விளையாடுவது என்று வந்துவிட்டால் மிகவும் வேடிக்கையாக நடந்துக்கொள்வார்கள்.

குறிப்பாக சிறுவர்கள் நீச்சல் குளத்தில் சில சமயம் சிறுநீர் கழித்துவிடுவார்கள். இதனை பெரியவர்களும் கூட சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள்.

நீச்சல் தடாகத்தில் தவறியும் சிறுநீர் கழிக்காதீர்கள்... மரணத்தை ஏற்படுத்தும் ஜாக்கிரதை! | Side Effects Of Pee In The Poolஆனால் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விடயம் என்பது நம்மில் பலரும் அறியாத விடயம். பாரிய கொள்ளளவு தண்ணீர் கொண்ட நீச்சல் தடாகத்தில் சிறுநீர் கழித்தால் அது உடல் ஆராக்கியத்தில் தாக்கம் செலுத்தாது என பலரும் இதை அலட்சியப்படுத்துகின்றனர்.

பெரும்பாலான நீச்சல்குளங்களை சுத்திகரிப்பதற்காகவும் கிருமி நீக்குவதற்காகவும் அதிகளவில் குளோரின் பயன்படுத்தப்படுகின்றது.

நீச்சல் தடாகத்தில் தவறியும் சிறுநீர் கழிக்காதீர்கள்... மரணத்தை ஏற்படுத்தும் ஜாக்கிரதை! | Side Effects Of Pee In The Pool

இந்த குளோரிளுடன் சிறுநீர் கலக்கும் போது சயனோசன் குளோரைடு எனும் ரசாயனம் உருவாகும். இந்த ரசாயனம் மிகவும் நச்சு தன்மை வாய்ந்தது. இது மனிதனின் நுறையீரல் மற்றும் இதயத்தை வலுவாக பாதிக்கக் கூடியது.

இந்த ரசாயனம் கண்கள் அல்லது சுவாச உறுப்புகளில் பட நேர்ந்தால் உடனடியாக காயத்தை ஏற்படுத்தும். 

நீச்சல் தடாகத்தில் தவறியும் சிறுநீர் கழிக்காதீர்கள்... மரணத்தை ஏற்படுத்தும் ஜாக்கிரதை! | Side Effects Of Pee In The Pool

மேலும் அயர்வு, தொடர்சளி (மூக்கு ஒழுகுதல்), தொண்டை வறட்சி, இருமல், குழப்பம், குமட்டல், வாந்தி, வீக்கம், உணர்விழப்பு, வலிப்பு, பக்கவாதம் மற்றும் மரணத்தை கூட சயனோசன் குளோரைடு ஏற்படுத்தும். 

எனவே நீச்சல் குளத்தில் குளிக்கும் போது நம்மை பாதுகாத்துக் கொள்வதோடு மற்றவர்கள் குறித்தும் அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டியது அவசியம். பெற்றோர் இந்த விடயம் தொடர்பில் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டியதும் முக்கியம்.