எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும்.

இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் படிப்பில் மேதாவிகளாக இருப்பார்களாம்.. நீங்க பிறந்த திகதி என்ன? | Numerology Born These Dates People Smart In Study

எண் கணிதத்தின் படி, சில தேதிகளில் பிறந்தவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம். அப்படியானவர்கள் என்னென்ன திகதிகளில் பிறந்திருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

 1. ஒவ்வொரு மாதத்திலும் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் படிப்பில் சிறந்தவர்களாக இருப்பார்களாம். ஏனெனின் இவர்களின் ராசியில் அதிபதி வியாழன் அதாவது குரு பகவானின் ஆதிக்கம் இருக்கும். இவர்கள் மனதளவிலும், அறிவு அளவிலும் கூர்மையானவர்களாக இருப்பார்களாம். அத்துடன் பிறந்த நபர்கள் மிகுந்த சுயமரியாதை உடையவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு நபரின் தனிப்பட்ட விஷயங்களிலும் தலையிடமாட்டார்கள். இதுவே இவர்களை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் படிப்பில் மேதாவிகளாக இருப்பார்களாம்.. நீங்க பிறந்த திகதி என்ன? | Numerology Born These Dates People Smart In Study

2. 3ஆம் எண்ணை கூட்டு எண்ணாக கொண்டவர்கள் கல்விக்கும், அறிவுக்கும் அலைய வேண்டியதில்லை. எளிதில் கல்வி பெற்று ஞானத்தில் சிறந்தவரகளாக இருப்பார்கள். இவர்களை ஒப்பிட்டு தான் மற்றவர்களை பேசுவார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்களின் எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும்.

3. 12 மாதங்களில் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் அறிவு ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களின் கூட்டு எண் 7 ஆக இருக்கும். கேது ஆதிக்கம் கொண்ட இவர்கள் எல்லா விடயங்களிலும் திறமையானவர்களாக இருப்பார்கள். கல்வி மூலம் அறிவை பெற்று புகழை பெறுவார்கள் அவர்களிடம் இருக்கும் ஞானத்தால் எதிர்காலத்தில் பெரிய பதவியை அடைகிறார்கள்.