வீட்டில் வாஸ்து விதிகளை பின்பற்றுபவர்களுக்கு துளசி செடி என்பது ஆன்மீக சம்பந்தமான பல விடயங்களை கொண்டுள்ளதுடன், பெரும்பாலான வீடுகளில் துளசி செடியினை வணங்குவதும் உண்டு.

துளசி செடி இந்து மதத்தின் புனித தாவரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது மற்றும் விசேஷ சந்தர்ப்பங்களில் மட்டுமல்ல, வழக்கமான அடிப்படையிலும் வழிபடப்படுகிறது.

மங்களகரமானதாக கருதப்படும் துளசி செடி இருக்கும் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் நேர்மறை ஆற்றலும் இருந்து கொண்டே இருக்கும்.

காய்ந்த துளசி செடியை உடனே தூக்கி எறியாதீங்க.... வீட்டில் பிரச்சினை வருமாம் | Dried Tulsi Plant Throw Avoid At Home Vastuஆனால் துளசி செடியை சரியான திசையில் நீங்கள் வைக்க வேண்டும். அவை காய்ந்து போகாமல் எந்த அளவிற்கு பசுமையாக இருக்கின்றதோ, அந்த அளவிற்கு வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

துளசி செடி காய்ந்து போனால் வீட்டில் சில பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. காய்ந்த துளசியை உடனே தூக்கி எறியாமல் அதனை என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

வீட்டில் துளசி செடி திடீரென காய்ந்துவிட்டால் உடனே தொட்டியில் இருந்து அகற்றாமல், அதனை சரியான முறையில் வெளியே எடுக்க வேண்டும்.

இதற்கு திங்கள் மற்றும் வெள்ளி மிகவும் புனிதமான நாட்களாக கருதப்படுகிறது. காய்ந்த செடிகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அளிப்பதால் அதிக நேரம் வீட்டிற்குள் வைக்கக்கூடாது.

காய்ந்த துளசி செடியை உடனே தூக்கி எறியாதீங்க.... வீட்டில் பிரச்சினை வருமாம் | Dried Tulsi Plant Throw Avoid At Home Vastu

காய்ந்த துளசி செடியின் தண்டை தனியாக பிரித்து எடுத்து வைக்கவும், ஏனெனில் அதிலிருந்து புதிய செடி வளரும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு புதிய செடி உருவாவகது மங்களகரமானதாக கருதப்படுகின்றது.

துளசியை அகற்றுவதற்கு முன்பு அதனை வணங்கி, நன்றி தெரிவிக்கும் வகையில் சிறிய சடங்கை செய்ய வேண்டும். 

காய்ந்த துளசி செடியை உடனே தூக்கி எறியாதீங்க.... வீட்டில் பிரச்சினை வருமாம் | Dried Tulsi Plant Throw Avoid At Home Vastu

காய்ந்த செடியை எடுத்துவிட்டால் அதற்கு பதிலாக புதிய செடியை நடலாம். இவை வீட்டில் நேர்மறை ஆற்றலை புதுப்பிக்கின்றது.

காய்ந்த துளசி செடியை நீக்கிய பின், வைத்திருந்த இடத்தை சுத்தம் செய்யவும். எந்தவொரு எதிர்மறை ஆற்றலையும் அகற்ற கல் உப்பு அல்லது தூபம் போன்றவை பயன்படுத்தவும்.