பொதுவாக புதிதாக ஒரு வீட்டை கட்டும் போது அல்லது வாங்கும் பொழுது தலைவாசலில் எவ்வளவு கவனம் செலுத்துகின்றோமோ அதே அளவு மாடிப்படியிலும் கவனம் செலுத்த வேண்டும்.
வீட்டில் இருக்கும் மாடிப்படிகளில் கூட வாஸ்து சாஸ்திரம் மாறியிருந்தால் பிரச்சனைகள் வரலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீட்டின் அழகை கூட்ட விதவிதமான வடிவமைப்புகளை மட்டும் பின்பற்றுகிறார்கள். இதில் தவறு கிடையாது. வாஸ்துக்களின் படி இருக்க வேண்டிய விடயங்கள் இருக்க வேண்டிய இடங்களில் தான் இருக்க வேண்டும்.
இது முறையாக இல்லாவிட்டால் பணக்கஷ்டம், மனகசப்புகள், வீட்டில் ஏதாவது பிரச்சினை இப்படியான பல இன்னல்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அந்த வகையில் மாடிப்படிகள் அமைக்கும் பொழுது என்ன மாதிரியான வாஸ்துக்களை பின்பற்ற வேண்டும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
1. வீட்டில் அல்லது கட்டிடங்களில் உட்புறத்தில் படிக்கட்டு அமைக்க விரும்பினால் அதனை தெற்கு அல்லது மேற்கு பகுதி நடுவில் அமைப்பது சிறந்தது.
2. அதே சமயம், படிக்கட்டுகள் வெளிப்புறத்தில் அமைக்க விரும்பினால் அதனை தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு முலையில் அமைப்பது சிறந்தது. இவ்வாறு அமைக்கப்படும் படிக்கட்டுக்களை "கேண்டிலிவேர்" முறையில் அமைக்க வேண்டும்.
3. சிலர் வீட்டு வாசலில் படிகட்டுக்கள் அமைப்பார்கள். இது போன்ற சந்தர்ப்பங்களில் வீட்டிற்கான வாசல் படிகள் வாசற்படியிலிருந்து சரியாக ஒன்பதில் ஐந்து பங்கு அகலம் இருக்க வேண்டும்.
அதாவது, உயரம் 9 அடிகள் இருந்தால் அகலம் 5 அடிகள் இருக்கவேண்டும். இந்த அளவீட்டை பயன்படுத்தும் பொழுது லட்சுமி கடாட்சம் வீட்டில் பெருகும்.
4. வீட்டிற்கு வெளியில் வாசல்படி இருப்பதை விட உட்புறமாக இருந்தால் அதிக நன்மைகள் உண்டு. வாசல் படிகளை கருங்கற்களால் அமைக்க கூடாது. மாறாக வாசல் படிகள் எண்ணிக்கை இரட்டைப்படையாக இருப்பது நல்லது.
5. வெளியிலிருந்து வீட்டிற்குள் வருபவர்களின் பார்வைக்கு சாமிப்படங்களை வைப்பது சிறந்தது.
6. வீட்டில் மாடிப் படிகளை இடது புறத்தில் தான் அமைக்க வேண்டும். உரிமையாளரின் ஜாதகப்படி மாற்றிக்கொள்வது அதிகப்படியான நன்மையை தரும்.
7. கட்டிடத்தில் மாடிப்படிகளை வடக்கு அல்லது கிழக்கு திசைகள் நோக்கி அமைக்க வேண்டும். நாம் நம்முடைய இடது கையை மாடி ஏறும் போது கைப்பிடியாக பயன்படுத்த வேண்டும்.