சராசரி நபர் இரவில் தூங்குவதற்கு சுமார் 10 முதல் 20 நிமிடங்கள் ஆகும். ஆனால் தூக்கக் கலக்கத்துடன் வாழும் 70 மில்லியன் மக்கள் தவிப்பதாக அறிக்கை ஒன்றும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

பெரும்பாலும், மோசமான தூக்க தாமதம் கவலை அல்லது மன அழுத்தத்தின் விளைவாகும். இது தூக்கத்திற்குத் தயாராக இருக்கும் மனநிலையில் இருந்து உங்களை பலவீனப்படுத்துகிறது.

இரவில் தூக்கம் வராமல் அவஸ்தையா? பத்தே நிமிடத்தில் தூங்கணும்னா இதை செய்ங்க | How To Fall Asleep In 10 Minutes

நீங்கள் தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டால், நீங்கள் மனஅழுத்ததில் இருப்பதாக அர்த்தம்.

வளர்சிதை மாற்றம், அறிவாற்றல் திறன்கள், உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். எனவே உங்கள் உடலையும் மனதையும் நீண்ட நேரம் அமைதிப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பது முக்கியம்.

ஆகவே படுக்கைக்கு சென்றவுடன் வெறும் 10 நிமிடத்திலேயே எப்படி தூங்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

  • இரவு நேரத்தில் தேநீர் குடிக்கவும். மனதிற்கு நிம்மதியான உறகத்தை அளிப்பதற்கு இதை குடிக்கலாம்.
     
  • 10 நிமிடங்களில் தூங்குவதற்கு இரவில் எளிதான யோகா ஆசனங்களை செய்யவும். தூங்கவும் பாலாசனம், சவாசனம், சேது பந்தாசனம், சுப்த பத்த கோனாசனம் போன்றவையை முயற்சிக்கலாம். 

இரவில் தூக்கம் வராமல் அவஸ்தையா? பத்தே நிமிடத்தில் தூங்கணும்னா இதை செய்ங்க | How To Fall Asleep In 10 Minutes

  • படுக்கையறை இருட்டாகவும், அமைதியாகவும், குளிர்ச்சியாகவும் வைத்திருக்கவும். இருளானது தூக்கத்தை ஊக்குவிக்கும். தூங்கும் போது கண்ணிற்கு முகமூடியைப் பயன்படுத்தவும்.
     
  • மெல்லிய இசையை கேட்கவும். ஒலியளவைக் குறைவாக வைத்திருக்கவும். அல்லது ஏதாவது ஒரு தாலாட்டு பாடலையும் கேட்கலாம்.
     
  • நல்ல சிலிக்கானில் செய்யப்பட்ட ஒரு ஸ்லீப்பிங் ஐ மாஸ்கை பயன்படுத்தவும். இது கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்து, நிம்மதியாக உணர வைக்கும். மேலும் நல்ல தூக்கத்தையும் தரும்.