தற்காலத்தில் லேப்டாப் பாவனை அதிகரித்துவிட்டது. அனைத்து வேலை வாய்ப்புகளும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டதாக மாறிவருகின்றது.
வேலைக்கு மாத்திரமன்றி கற்றல் நடிவடிக்கைகளும் கூட தற்போது இணையத்தை மையமாக கொண்டுள்ளது.இந்நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் லேப்டாப் கனணிகளை பாவிக்கின்றனர்.
இந்நிலையில் லேப்டாப்பை அதிக நேரம் மடியில் வைத்து வேலை செய்தால் ஆபத்தான உடல்நல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை செய்யும் பெண்களுக்கு கருத்தரிக்கும் இயல்பு குறைவடைகின்றது.என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், கர்ப்பிணிப் பெண்கள் லேப்டாப்புடன் நெருக்கமாகப் பணிபுரிவது கருவிலிருக்கும் குழந்தையையும் பாதிக்கும்.
அதேபோல் ஆண்கள் மடியில் லேப்டாப்பை வைத்து வேலை செய்தால் விந்தணுக்களின் வளர்ச்சி குறையும். இது கருவுறுதலைக் குறைக்கிறது.
லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை செய்தால் தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. லேப்டாப்பை அந்தரங்க பாகங்களுக்கு அருகில் வைப்பதால் அங்கேயும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
எனவே பல முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும். கழுத்து மற்றும் முதுகு வலி: லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை செய்வது நல்லதல்ல. இதன் காரணமாக, கழுத்து மற்றும் முதுகு பகுதிகள் வளைந்துவிடும்.
லேப்டாப் எலக்ட்ரோமோட்டிவ் சக்தியை வெளியிடுகின்றன. இவை EMF என்றும் அழைக்கப்படுகின்றன.இந்த கதிர்வீச்சு ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
அதுமட்டுமல்லாமல், இந்த கதிர்வீச்சால், பல உடல்நலப் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.