பிக்பாஸ் சீசன் 7 ல் இலங்கையை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ள போகின்றதா என்பது இன்று வரை இரகசியமாக பேணப்பட்டு வருகின்றது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று.

இந்த நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவேற்றி விட்டு தற்போது ஏழாவது சீசனில் உழைகின்றது.

அத்துடன் இந்த தடவை பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு சர்ச்சைக்குரிய பிரபலங்கள் போட்டியாளர்களாக தெரிவுச் செய்யப்பட்டுள்ளார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வழமைக்கு மாறாக சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி விடுவார்கள்.

பிக்பாஸ் 7 ல் யாழ். மண்ணிற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! | Sri Lankan Celebrity To Participate In Bigg Boss 7

மீடியாப்பயணத்தை இதிலிருந்து ஆரம்பிப்போம் என நினைக்கும் போட்டியாளர்களுக்கு இது களமாக பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழமைக்கு மாறாக இலங்கையிலிருந்து ஒரு பிரபலம் தெரிவுச் செய்யப்படுவார்.

அந்த வகையில் கடந்த சீசன்களில் ஜனனி மற்றும் லொஸ்லியா ஆகிய யாழ். மண் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

பிக்பாஸ் 7 ல் யாழ். மண்ணிற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! | Sri Lankan Celebrity To Participate In Bigg Boss 7

இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் விவரங்கள் வெளியான நிலையில் சிலரின் பெயர் இன்றும் இரகசியமாகவே பேணப்பட்டு வருகின்றது.

இதனை தொடர்ந்து ஜனனியை போல் இருக்கும் பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் இலங்கையில் இருக்கும் திறமைமிக்க கலைஞர்கள் வெளிகாட்டப்படுவார்கள் என இலங்கை பிக்பாஸ் ரசிகர்கள் முனுமுனுத்து வருகின்றார்கள்.

பிக்பாஸ் 7 ல் யாழ். மண்ணிற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! | Sri Lankan Celebrity To Participate In Bigg Boss 7

மேலும் இந்த தடவை பிக்பாஸ் சீசன் 7 இலங்கை பிரபலமான பீஸ்ட் நடிகை காயத்ரி சான் அவர்கள் கலந்து கொள்ளலாம் என சில தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்தளவு உண்மை என்று இது வரை உறுதிச் செய்யப்படவில்லை.