பொதுவாகவே ஆண்களும் சரி பெண்களும் சரி அழகாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அதுவும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.

இவர்கள் எப்போதுமே தங்கள் அழகில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். தற்போதைய பிஸியான வாழ்க்கை முறையால் அந்த நேரம் கூட கிடைக்கவில்லை.

இயற்கையாகவே மேக்-அப் பொலிவு வேண்டுமா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க | Healthy And Beautiful Naturally Without Makeupஇதன் காரணமாக முகம் உயிரற்றதாகவும், உடல் மந்தமாகவும் மாறும். ஆனால் உள்ளே ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே வெளிப்புற உடல் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். எவ்வளவு மேக்கப் போட்டாலும் முகத்தில் பொலிவு இல்லையென்றால் பார்ப்பதற்கு அழகாக இருக்காது.

உடல் அழகாக இருப்பதற்கு வைட்டமின்கள், தாதுக்கள், பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீரேற்றம் தேவை. உடலை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான அளவு தண்ணீர் மற்றும் ஜூஸ் குடிக்கலாம். அல்லது தண்ணீர் நிறைந்த பழங்களை சாப்பிடலாம்.

இயற்கையாகவே மேக்-அப் பொலிவு வேண்டுமா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க | Healthy And Beautiful Naturally Without Makeupஅதுமட்டுமின்றி நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம் போன்ற சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அனைத்து வகையான சத்துக்களையும் உட்கொண்டாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

குறிப்பாக வைட்டமின் ஈ உடலில் இல்லாததால் முகம் பொலிவிழந்து, கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகள் போன்ற சருமப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி ரத்த ஓட்டமும் மேம்படும். இதனால் முகமும் உடலும் பிரகாசமாக இருக்கும்.

இயற்கையாகவே மேக்-அப் பொலிவு வேண்டுமா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க | Healthy And Beautiful Naturally Without Makeup

 

முகத்தில் உள்ள கறைகள் குறையும். இலைக் காய்கறிகளில் அனைத்து வகையான சத்துக்களும் உள்ளன.

இவற்றைத் தொடர்ந்து உட்கொள்வதால் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். மேலும் சருமம் பளபளப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி, பீட் ரூட் மற்றும் கேரட் கலந்த உணவுகள் மற்றும் பழச்சாறுகள் சருமத்தை பளபளப்பாக்குவதுடன், நல்ல ஊட்டச்சத்துக்களையும் வழங்கும்.

இயற்கையாகவே மேக்-அப் பொலிவு வேண்டுமா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க | Healthy And Beautiful Naturally Without Makeup

 

சோயா பீனில் வைட்டமின்-இ மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இவற்றை உணவில் சேர்ப்பது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பாதாம் மற்றும் வேர்க்கடலையிலும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது.

இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.சருமமும் பொலிவாக மாறும். மேலும், தினமும் 8 கிளாஸ் தண்ணீர், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது அழகாக இருக்க உதவும்.

இயற்கையாகவே மேக்-அப் பொலிவு வேண்டுமா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க | Healthy And Beautiful Naturally Without Makeup

இந்த முறைகளை பின்பற்றினால் போதும் மேக் அப் இல்லாமலேயே முகம் பிரகாசமாக மாறுவதை கண்கூடாக அவதானிக்கலாம்.