பொதுவாகவே அனைவரும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள், பணத்தை வேண்டாம் என சொல்பவர்கள் யாருமே உலகில் இருக்க முடியாது. ஆனால் இயற்கையாகவே சில பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கக் கூடிய சக்தி காணப்படுகின்றது.

இந்த பட்டியலில் பச்சை கற்பூரம் முக்கிய இடம் வகிக்கின்றது. இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் பச்சை கற்பூரத்தை எப்படி பயன்படுத்தினால் பணத்தை ஈர்க்க முடியும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகமாக காணப்படுகிறது. பச்சை கற்ப்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வமும் செழிப்பும் நிறைந்து காணப்படும்.

பணத்திற்கு பஞ்சமே வரக்கூடாதா? அப்போ பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்துங்க | The Power To Attract Money Pachai Karpooram

பச்சை கற்பூரமானது அதிக வாசனை நிறைந்தது. இதன் வாசனை வீட்டில் நேர் மறை சக்திகளை அதிகரிக்கக் கூடியது. 2 அல்லது 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும்.

பச்சை கற்பூரத்தின் வாசனை உடலுக்கு புத்துணர்வு வழங்குகின்றது. இதனால் சிந்தனை தெளிவாகும். உழைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கவும் இது துணைப்பபுரியும். வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை பயன்படுத்துவது நல்லது.

பணத்திற்கு பஞ்சமே வரக்கூடாதா? அப்போ பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்துங்க | The Power To Attract Money Pachai Karpooram

தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான கல்லாப்பெட்டி, பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம். இதன் மூலம் பணம் எடுக்க எடுக்க நிறைந்துக் கொண்டே இருக்கும்.

பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள், கெட்டசக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் வீட்டை விட்டு வெளியே போகும். பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை இருக்கிறதினால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாமல் வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

பணத்திற்கு பஞ்சமே வரக்கூடாதா? அப்போ பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்துங்க | The Power To Attract Money Pachai Karpooram

வீண் செலவுகள் இருக்காது. இந்த கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும்போது, அங்கு வரும் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும். இதனால் பணம் அதிகமாக சேர்கின்றது.

பச்சை கற்பூரத் துண்டை, ஒரு பேப்பரில் வைத்து மடித்து நீங்கள் பணம் வைத்திருக்கும் பையில் வைத்திருந்தால் பணம் எப்போதும் குறையாது. இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.

பணத்திற்கு பஞ்சமே வரக்கூடாதா? அப்போ பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்துங்க | The Power To Attract Money Pachai Karpooram

வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி வசிப்பதாக இந்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. ஆதலால் பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வத்திற்கு குறைவே இருக்காது.