பொதுவாகவே எல்லா சுப நிகழ்வுகளிலும் மாவிலையில் தோரணம் கட்டுவது வழக்கம். இது வெறுமனே ஒரு அலங்காரம் சார்ந்த விடயமாக மாத்திரம் செய்யப்படுவது கிடையாது.

நமது முன்னோர்கள் எதை செய்தாலும் அதன் பின்னால் துள்ளியமான அறிவியல் காரணம் கட்டாயம் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

மாவிலை தோரணம் கட்டுவதற்கு இது தான் காரணமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க | Why We Used Mango Leaves In Tamilஅந்த வகையில் சுப நிகழ்வுகளின் போதும் சரி அமங்களமாக நிகழ்வுகளின் போதும் சரி மாவிலை தோரணம் கட்டுவதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்ககலாம்.

பொதுவாகவே தாவரங்கள் பகல் வேளையில் கார்பன் டைஆக்சைட்டை  உறிஞ்சிக்கொண்டு ஆக்சிசனை வெளியிடும் ஆற்றல் கொண்டது. இது தாவரத்தின் இலைகள் வாயிலாகவே இடம்பெறுகின்றது.இலைகள் தாவரத்துடன் இணைந்திருக்கும் போதே இது சாத்தியம்.

மாவிலை தோரணம் கட்டுவதற்கு இது தான் காரணமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க | Why We Used Mango Leaves In Tamilஆனால் மாவிலை மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட பின்னரும் கூட காபன் டைஆக்சைட்டை உறிஞ்சிக்கொண்டு ஆக்சிசனை வெளியிடும் ஆற்றல் கொண்டது. இதன் காரணமாகவே மாவிலையில்  தோரணம் கட்டப்படுகின்றது. மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளில் ஆக்சிசன் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு அதிகம். 

மாவிலை தோரணம் கிருமிநாசினியாகச் செயல்படுகிறது.  மனிதர்கள் வெளியிடும் காபன் டைஆக்சைட்டை உள்ளீர்த்து சுற்றுச்சூழலைச் சீர் செய்வதாக இருக்கிறது. 

விழாக்களின் போது மாவிலை தோரணம் கட்டுவதால், விழாவுக்கு வரும் மக்களின்  எதிர்மறை எண்ணங்கள் நீக்கி புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

மாவிலையில்  காணப்படும் கிருமிகளை அழிக்கும் பண்பு காரணமாக கூட்டமான இடங்களிலும் கூட நோய் பரவும் அபாயம் கணிசமாக குறைவடைகின்றது.