பொதுவாக இந்து மதத்தை சார்ந்தவர்கள் நெற்றியில் விபூதி பூசுவார்கள்.
இந்து சமயம் சார்ந்த கோயில்களில் விபூதியை பிரசாதமாக கொடுப்பார்கள்.
இது காலம் காலமாக நடந்து வரும் நடைமுறைகளில் ஒன்று. கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருக்கிறது. இதனை வீட்டிலுள்ள முன்னோர்கள், ஆசிரியர்கள், சமய குரவர்கள் என அனைவரும் வலியுறுத்தி கூறுவார்கள்.
சிலர் வைக்க மறந்து விட்டால் அன்றைய நாளே துவங்காதது போல் உணர்வார்களாம். இவ்வளவு முக்கியத்துவம் ஏன் விபூதிக்கு கொடுக்கிறார் என அனைவரும் சிந்தித்துருப்போம்.
அந்த வகையில், கோவிலில் இறைவனை தரிசித்த பிறகு பிரசாதமாக கொடுக்கப்படும் விபூதியை நெற்றியில் வைக்க வேண்டும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
1. முகத்தை அண்ணாந்து வைத்து நிலத்தில் சிந்தாமல் நடு மூன்று விரல்களினால் நெற்றி நிறைய பூசவேண்டும்.
2. நடந்து கொண்டு, அல்லது படுத்துகொண்டு விபூதி பூசக்கூடாது. ஆச்சாரியார், சிவனடியார் இவர்களிடம் விபூதி பெறும்போது அவர்களை வணங்கி பெறுதல் வேண்டும்.
3. வடக்கு - கிழக்கு முகமாக நின்று திருநீறு பூசவது அவசியம். தலையை கவிழ்த்தும் நடுங்கி கொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக் கொண்டும் திருநீறு பூசுவதை தவிர்க்க வேண்டும்.
4. விபூதி பிரசாதம் வாங்கும் போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து தான் கோயிகளில் வாங்க வேண்டும். 5. இடது கை விரலால் நெற்றியில் விபூதி இடக்கூடாது. ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது.
விபூதி பூசுவதால் ஏற்படும் நன்மைகள்
1. விபூதி வைத்து கொண்டு வெளியில் செல்வதால் தீவினைகள் நம்மை நெருங்காது என அவர்கள் நம்புகிறார்கள்.
2. ஒழுக்கத்தில் நல்லவராகவும் விபூதி வைத்திருப்பவர்கள் விரும்புவார்கள்.
3. விபூதியுடன் இருப்பதால் கடவுள் தன்னுடன் இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
4. கெட்ட சக்திகளிடமிருந்து எம்மை கவசமாய் காத்து, செல்வத்தை கொடுக்கும்.