பொதுவாகவே எந்த துறைசார்ந்த வேலைக்கு விண்ணப்பித்தாலும் கட்டாயமாக நேர்காணலுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

முதல் முறையாக நேர்காணலுக்கு செல்லும் ஒருவராக இருந்தாலும் சரி ஏற்கனவே ஒரு வேலையில் இருப்பவரும் அதைவிட ஒரு பெரிய வேவைக்கு விண்ணப்பிக்கும் போது கட்டாயம் ஒரு நேர்காணலை சந்திக்க வேண்டி ஏற்படுகின்றது.

நேர்காணல் என்றாலே பயப்படுபவரா நீக்க ? இந்த பதிவு உங்களுக்கு தான் | How To Face Job Interviewsஇவ்வாறு நேர்காணலின் போது முக்கியமாக கேட்கப்படும் கேள்விகள் குறித்தும் இதற்கு சிறந்த பதிலை சொல்வதற்கு நம்மை எப்படி தயார் செய்துக்கொள்ளலாம் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம். 

புதிதாக வேலைக்கு செல்பவர்களிடம் பெரும்பாலும், கேட்கப்படும் கேள்விகள் பல உள்ளன. “ பெயர் என்ன?” என்ற கேள்வியில் ஆரம்பித்து, “குடும்ப பின்னணி என்ன?” என்பதில் தொடர்ந்து, “என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீங்க?” என்பதில் முடியும் இந்த நேர்காணல்.

நேர்காணல் என்றாலே பயப்படுபவரா நீக்க ? இந்த பதிவு உங்களுக்கு தான் | How To Face Job Interviewsபலமுறை நேர்காணல்களை சந்தித்தவர்கள் கூட  இந்த கேள்விக்கு தடுமாறி பதில் கூறுவதுண்டு. நேர்காணல் என்றாலே பயப்படுவோர், இந்த கேள்வி எழும் போது “நம்மை தவறாக எடைபோட்டு வேலை கொடுக்காமல் போய்விடுவார்களோ என்ற பயத்தில் தேவைப்படும் சம்பளத்தை கூற முடியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டிருக்கும். 

சிலபேர்  நேர்காணலை நடத்துபவர் என்ன நினைப்பார் என்று சிந்தித்துக்கெண்டே தான் தெளிவாக பதில் சொல்ல வேண்டிய முக்கியமாக கேள்வியான என்ன சம்பளம் எதிர்ப்பார்க்கின்றீர்கள்? என்ற கேள்விக்கு சரிவர பதில் கூறமல் விட்டுவிடுகின்றார்கள். அல்லது தேவைப்படும் சம்பளத்தை விட மிக குறைவாக கேட்டுவிடுகின்றனர். 

நேர்காணல் என்றாலே பயப்படுபவரா நீக்க ? இந்த பதிவு உங்களுக்கு தான் | How To Face Job Interviews

இதை வாய்ப்பாக பயன்படுத்தி நிறவனத்தினர் அவர்கள் கேட்டிருக்கும் சம்பளத்தை விட இன்னும் குறைவாகவே தர முடியும் என்று கூறுவர். ஆனால், அந்த Job Role-ற்கு அதை விட அதிக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இந்த கேள்வியை புத்திசாலித்தனமாக சமாளிப்பது எப்படி? இதற்கு ஏற்ற பதில் என்ன?

நேர்காணல் என்றாலே பயப்படுபவரா நீக்க ? இந்த பதிவு உங்களுக்கு தான் | How To Face Job Interviews

என்ன சம்பளம் எதிர்பார்க்கின்றீர்கள் என்ற கேள்விக்கு இந்த தொகை சம்பளமாக வேண்டும் என்று கூறி விட கூடாது. நீங்கள் விண்ணப்பித்திருக்கும் வேலைக்கான அனைத்து திறன்களும் என்னிடம் உள்ளன. அதனால், இந்த வேலையில் என்னால் சிறப்பாக செயல்பட முடியும்.

என் திறனை பொறுத்து, இந்த வேலைக்கான சம்பளத்தை கொடுங்கள், என்று கூறலாம். அல்லது, நீங்கள் ஏற்கனவே ஒரு வேலையில் இருந்து இந்த வேலைக்கு செல்கிறீர்கள் என்றால், அந்த தொகையை விட அதிகமாக கேட்கலாம். இந்த பதிலில் உங்கள் ஆளுமையும் உயரும். 

நேர்காணல் என்றாலே பயப்படுபவரா நீக்க ? இந்த பதிவு உங்களுக்கு தான் | How To Face Job Interviews

நேர்காணலில் பதற்றமடைய அவசியமே இல்லை. நீங்கள் மனஉறுதியுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டும். உங்களைப் பார்த்தாலே ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி தோன்ற வேண்டும். 

நேர்காணலுக்கு குறித்த நேரத்தைவிட 30 நிமிடங்களாவது முன்னதாக செல்வது பதட்டத்துக்கு தீர்வாக அமையும். 

நேர்காணல் என்றாலே பயப்படுபவரா நீக்க ? இந்த பதிவு உங்களுக்கு தான் | How To Face Job Interviews

உங்களால் நிறுவனத்துக்கு எந்த வகையில் லாபம் கிடைக்கும், இதற்கு முன்பு என்ன வேலை பார்த்துக் கொண்டிருந்தீர்கள், ஏன் அந்த வேலையை விட்டுவிட்டு புதிய வேலைக்கு விண்ணப்பிக்கின்றீர்கள் எப்பவற்றுக்கு சுருக்கமாக பதிலளிக்க முன்னதாகவே தயார் செய்துக்கொள்ளுங்கள். 

நேர்காணல் என்றாலே பயப்படுபவரா நீக்க ? இந்த பதிவு உங்களுக்கு தான் | How To Face Job Interviews

முடிந்தவரை உண்மையை மட்டும் கூறுங்கள் இது உங்களின் ஆளுமையை உங்களை அறியாமலே உயர்த்திக் காட்டும்  இது  போன்ற விடயங்களில் கவனம் செலுத்தினாலே போதும் நேர்காணலை வெற்றிக்கொள்வது இலகுவான விடயமாகிவிடும்.