பொதுவாககேவே சிக்கன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். சிக்கன் குழம்பை பல வகைகளில் சமைக்கலாம்.

சிக்கன் குழம்பின் ஸ்பெஷல் அது எல்லா உணவுடனும் நல்ல மேச்சிங் கொடுப்பது தான்.

பாரம்பரிய கிராமத்து முறையில் மசாலாக்களை அரைத்து ருசியாக சிக்கன் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கிராமத்து ஸ்டைலில் சிக்கன் குழம்பு: இனிமேல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! | Chicken Curry In Recipe In Tamil

தேவையான பொருட்கள்

  •  சிக்கன் 
  • பிரியாணி இலை 
  • தேவையான அளவு எண்ணெய்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • கறிவேப்பிலை 
  • சின்ன வெங்காயம் 
  • அன்னாசிப் பூ 
  • ஏலம் 
  • பச்சை மிளகாய் 
  • மிளகு 
  • மிளகாய் தூள்
  • மலாளா தூள்
  • மஞ்சள் தூள்
  • மல்லி தூள்
  • முந்திரி மற்றும் கசகசா 

செய்முறை 

கிராமத்து ஸ்டைலில் சிக்கன் குழம்பு: இனிமேல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! | Chicken Curry In Recipe In Tamil

ஒரு கடாயில் 2 தே.கரண்டி எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதன் பின்னர் 3சிறிய பிரியாணி இலைகளை சேர்க்க வேண்டும் பின்னர் 1 ஏலம் மற்றும் பொடியாக நறுக்கிய 3 வெங்காயங்களை இதில் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதில் நறுக்கிய 2 தக்காளி மற்றும் தேவையான அளவு கறிவேப்பிலையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

அதன்பின் நன்றாக கழுவி தயார் செய்யப்பட்ட சிக்கனை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இது வதங்கும் நேரத்தில் சிக்கன்  குழம்புக்கு தேவையான மசாலாவை அரைத்து தயார் செய்துக்கொள்ளலாம். 

கிராமத்து ஸ்டைலில் சிக்கன் குழம்பு: இனிமேல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! | Chicken Curry In Recipe In Tamil

மிக்சியில் 50 கிராம் சின்ன வெங்காயம், 3 துண்டு தேங்காய் ,1 பச்சை மிளகாய், 2 தே. கரண்டி மிளகு ,1 தே.கரண்டி சீரகம் மற்றும்  சிறிய துண்டு பட்டை ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் பின்னர் அதில் 6 ஊரவைத்த முந்திரி மற்றும் கசகசாவை சேர்த்து தேவையான அளவு நீர் நேர்த்து மீண்டும் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

இப்போது சிக்கன் நன்றாக வதங்கியிருக்கும். இதில் 1 தே.கரண்டி மல்லி தூள், 1 தே.கரண்டி மிளகாய் தூள் ,1/2 தே.கரண்டி மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலலையையும் சேர்த்து நன்றாக கிளரிவிட வேண்டும். 

கிராமத்து ஸ்டைலில் சிக்கன் குழம்பு: இனிமேல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! | Chicken Curry In Recipe In Tamil

இதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக மூடி வேகவைக்க வேண்டும். குழம்பு சரியான பதத்திற்கு வந்தவுடன் நறுக்கிய கொத்த மல்லி இலைகளை தூவினால் மணமணக்கும் ருசியான சிக்கன் குழப்பு தயார்.