நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் வெந்தயம் தொப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ள நிலையில், இதனை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயம் சாப்பிடுவது மற்றும் வெந்தய டீ குடித்து வந்தால் தொப்பையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
கொதிக்க வைத்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு 15 முதல் 20 நிமிடம் வரை மீண்டும் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பால் காணப்படும் தொப்பை படிப்படியாக குறையும்.
மேலும் வெந்தயத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் இருப்பதால், இதனை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் நல்ல பலனை கண்கூடாக காணலாம்.
வெந்தயத்தில் இருக்கும் அமினோ ஆசிட் இன்சுலின் உற்பத்தியை அதிகரிப்பதால், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் கட்டுக்குள் இருக்கும்.
இதில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினையை போக்கவும் செய்கின்றது.