பொதுவாக  ஜாதகம், பிறந்த தேதி மற்றும் கைரேகை மூலம் ஒருவரது இயல்பு மற்றும் எதிர்காலத்தை எப்படி அறிந்து கொள்ள முடியுமோ, அதே போல் ஒருவரின் ஆளுமைக்கும் அவரின் பிறந்த தினத்திற்கும் இடையில் மிகவும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

வாரத்தின் ஏழு நாட்களில் பிறந்தவர்கள் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டுள்ளனர். எனவே வாரத்தின் வெவ்வேறு நாட்களில் பிறந்தவர்களின் இயல்பும் ஒன்றிலிருந்து ஒன்று நிச்சயம் வேறுப்படும்.

அந்தவகையில் ஞாயிற்றுக் கிழமைகளில் பிறந்தவர்களின் ஆளுமை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஞாயிற்றுக்கிழமைபிறந்தவரா நீங்க? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! | People Born On Sunday Astrology In Tamilஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களுக்கு  சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே, சூரிய பகவானின் ஆசீர்வாதம் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமைபிறந்தவரா நீங்க? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! | People Born On Sunday Astrology In Tamilஇவர்கள் எல்லா துறைகளிலும் வெற்றி அடைய கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படும்.இவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் முன்னிலை வகிப்பார்கள். இவர்கள் வசீகரமாக பேசுவதில் வல்லுநர்களாக இருப்பார்கள். 

இவர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள். மற்ற கிழமைகளில் பிறந்தவர்களுடன் ஒப்பிடும் போது இவர்கள் அதிகமாக கோபப்படக்கூடியவர்களாக இருக்கின்றனர்.  

அவர்களின் சிந்தனை லட்சியங்களால் நிரம்பியதாக காணப்படும் மற்றும் அவர்களின் தன்னம்பிக்கை மிகவும் உச்சத்தில் இருக்கும். 

சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருவது போல் எப்போதும் இவர்களை சுற்றி நண்கர்கள் மற்றும் உறவினர்கள் இருந்துக் கொண்டே இருப்பார்கள்.