பொதுவாக கண்கள் தான் மனிதனின் அடையாளம். எனவே எல்லோருக்கும் கவர்ச்சியான கண்கள் இருக்க வேண்டும் என ஆசைக் கொள்வார்கள்.

ஆனால் சில காரணங்களினால் கண்களுக்கு அடியில் கருவளையம் ஏற்பட்டு, உங்கள் கண்களின் அழகை மறைத்துவிடும்.

இது போன்ற பிரச்சினைகளை பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த வாழைப்பழ தோல் சரிச் செய்யுமாம். அத்துடன் இவை கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களையும், உணர்திறன் வாய்ந்த சருமத்தையும் குறைக்க உதவுகிறது என கூறப்படுகின்றது.

வாழைத்தோலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன.

கருவளையத்தை நீக்க வாழைப்பழ தோல் மட்டும் போதுமா? ஈஸியான வழி இது தான்.. செய்து பாருங்க! | Banana Peel Is A Remedy For Ovarian Problemsமேலும் வாழைப்பழத்தோல் சருமத்தில் உள்ள கொலாஜனை அதிகரிக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது.

அந்த வகையில் கருவளையம் இல்லாமல் போவதற்கு வாழைப்பழ தோலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

கருவளையத்தை நீக்க வாழைப்பழ தோல் மட்டும் போதுமா? ஈஸியான வழி இது தான்.. செய்து பாருங்க! | Banana Peel Is A Remedy For Ovarian Problems

1

  • முதலில் வாழைப்பழத் தோலை எடுத்து ஃப்ரிட்ஜில் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.
  • பின்னர் அவற்றை குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியே எடுக்கவும்.
  • எடுத்த தோலை கண்களுக்குக் கீழே சுமார் 15 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
  • 15 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவவும். இதனை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்ய வேண்டும்.

கருவளையத்தை நீக்க வாழைப்பழ தோல் மட்டும் போதுமா? ஈஸியான வழி இது தான்.. செய்து பாருங்க! | Banana Peel Is A Remedy For Ovarian Problems

 

2.

  • வாழைப்பழத் தோலை அரைத்து அல்லது சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு வாழைப்பழ பேஸ்டுடன் கற்றாழை ஜெல் சேர்த்து கலக்கவும்.
  • இந்த கலவையை கண்களுக்கு கீழ் போடவும். இந்த பேக்கை சிறிது நேரத்திற்கு பின்னர் கழுவி விட வேண்டும்.
  • அத்துடன் இரவு தூங்குவதற்கு முன்னர் கண்களுக்கு மாஸ்க் பயன்படுத்தவும்.