பொதுவாகவே வாழைப்பழம் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தைக் கொடுப்பவை. முக்கனிகளில் ஒன்றாக இந்த வாழைப்பழத்தில் பல வகைகள் இருக்கிறது. அவை ஒவ்வொன்றிற்கும் பல நன்மைகளும் பல சுவைகளுக்கும் இருக்கும்.

அந்தவகையில் பூவன் வாழைப்பழத்தில் இருக்கும் அற்புத பலன்களை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பூவன் பழத்தின் நன்மைகள்

  • பூவன் வாழைப்பத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்பு சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
  • மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் பூவம் வாழைப்பழம் சாப்பிட்டால் குடல் இயக்கம் சீராகி மலச்சிக்கலை போக்கும்.
  • பூவம் வாழைப்பழத்தில் அதிகளவான நார்ச்சத்து இருப்பதால் இது செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது.
  • அஜீரணக் கோளறு இருப்பவர்கள் தினமும் ஒரு வேளை வேறு உணவுகளை சாப்பிடாமல் வெறும் 2 பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு இல்லாமல் போகும்.
  • அல்சர் பிரச்சினை இருப்பவர்கள் தினமும் ஒரு பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அல்சர் பிரச்சினை தீரும்.
  • பூவன் வாழைப்பழத்தில் செரட்டோனின் என்ற ஹார்மோன் இருப்பதால் இது உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.
  • பூவன் பழத்தில் உள்ள மெலட்டோனின் தூக்கத்தை முறைப்படுத்த உதவும்.
  • பூவன் வாழைப்பழத்தில் துத்தநாகம், வைட்டமின் A, செலினியம் மற்றும் புரதம் என பல்வேறு சத்துக்கள் இருப்பதால் இது ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான ஊட்டசத்துக்களை வழங்குகிறது.
  • இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும்
  • தினமும் ஒரு பூவம் வாழைப்பழம் சாப்பிட்டால் கண் பார்வை குணமாகும்.
  • அதிக இரும்பு சத்து உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்தசோகையை போக்கும்.
  • புகைப்பிடிப்பவர்களுக்கு புகைப்பழக்கத்தை கைவிட இந்த வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் போதும்.