பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தங்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அதிலும் சிலர் எப்போதும் தங்களின் சருமம் குறித்து அதிக அக்கறை செலுத்துபவர்களாக இருப்பார்கள். 

தங்களின் சருமம் பொலிவிழந்து விட்டால் பெண்கள் மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதே உண்மை, அதனை தவிர்க்க எப்போதும் முகத்தை பொலிவாகவும் இளமையாகவவும் வைத்துக்கொள்ள என்ன செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கனுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க | How To Keep Face Beauty

ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் எடுத்து ஒன்றாக கலந்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சரும கருமை நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.

சருமத்திற்கு இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. இதில் பச்சை பால் மற்­றும் மஞ்சள் மிகவும் பயனுள்ள­தாக இருக்கும்.

பாலுக்கு பதிலாக தயிரையும் உபயோகிக்க முடியும்.  இவை இரண்டின் கலவையானது சருமத்தை இறுக்க­மாக்குகிறது. இதனால் முகம் எப்போதும் இளமையாக இருக்கும். 

முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கனுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க | How To Keep Face Beauty

சர்க்கரையில் சிறிது எலு­மிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சரு­மத்திலுள்ள இறந்த செல்கள் அனைத்­தும் நீங்கி சரும துளைகளிலுள்ள அழுக்­குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும். அதனோடு கோப்பி சிறிதளவு சேர்த்துக்கொண்டால் முகம் பளபளக்கும்.

தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகத்தில் உள்ள தழும்புகள் கருமை நீங்கி முகம் பளிச்சென்று வெள்ளையாகும். சருமத்திற்கு, பச்சை பால் மற்றும் மஞ்சள் சேர்த்து ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தினால் ஈரப்பதம் கிடைக்கும்.

இது தவிர, சரும நிறமும், சரும பளபளப்பும் காணப்படும். இதன் மூலம் உங்­கள் முகம் எப்போதும் புத்து­ணர்ச்­சியுடன் இருக்கும். சரும ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்த மேற்­கூறிய அழகுக் குறிப்புகளை செய்­வ­தோடு தினசரி நாம் குடிக்­கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.

முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கனுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க | How To Keep Face Beauty

அடிக்கடி தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் குடிப்பதால் உடலிலுள்ள நச்சுக்கள் அனைத்­­தும் வெளியேறி சருமம் பொலி­­வோடு காணப்படும். தண்­ணீர் குடிப்பதோடு நல்ல தூக்க­மும் மிகவும் அவசியமான ஒன்றா­கும். 

வீட்டில் அரிசி கழுவும் போது அந்த தண்ணீரை சேமித்து வைத்து தினசரி ஒருமுறை முகம் கழுவினால் முகம் இயற்கையாகவே சிகப்பழகு பெறுகின்றது. 

மேலும் தினசரி ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டுவர முகம் மினுக்கும் தன்மையை இயற்கையாகவே பெரும். அவகாடோ பழத்தினை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவிவர  கரும்புள்ளிகள் நீங்கும்.