பொதுவாக விலையுடன் ஒப்பிடும் போது தங்கம் மதிப்பு வாய்ந்ததாக இருந்தாலும் அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும் சக்தி வெள்ளிக்கு அதிகம் இருக்கின்றது.

ஆமாம் பணம் உட்பட அனைத்து ஐஸ்வர்யங்களும் வெள்ளியை அணிந்துக்கொண்டால் பெற முடியுமாம்.

நானும் தான் பல வருடமாக வெள்ளி மோதிரம் அணிந்திருக்கிறேன் அப்படி சொல்லும் அளவுக்கு பெரிதாக ஒரு மாற்றமும் இல்லையே இப்படி தானே யோசிக்கிறீங்க.. அணிந்திருக்கும் வெள்ளியை அடிக்கடி புதுப்பிக்கனுமாங்க, அதுல தான் விடயம் இருக்கு.

சகல செல்வங்களையும் ஈர்க்கும் வெள்ளி: வெள்ளியில் மோதிரம் அணிவதால் இத்தனை நன்மையா? | Benefits Of Wearing Silver Jewelryவெள்ளியில் ஆபரணங்களை அணிந்து கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்கி அதிகரிப்பதாகவும் நம் முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

மேலும் இது உடலுக்கு புத்துணர்ச்சியளிக்க கூடிய ஒரு உலோகம் என்பது அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் பெறப்பட்ட உண்மை.

மேலும் எம்முடைய ஜாதகத்தில் சந்திரன் வலுவிழந்து காணப்பட்டால் உங்களுடைய  எண்ணங்களில் பலவீனம் ஏற்படுவதுடன் அடிக்கடி நோய் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

இந்நிலையில் வெள்ளி எனும் உலோகத்திலான பொருட்களை நாம் உடலில் அணிந்திருந்தால், அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களிடமிருந்து எம்மை காக்கிறது.

சகல செல்வங்களையும் ஈர்க்கும் வெள்ளி: வெள்ளியில் மோதிரம் அணிவதால் இத்தனை நன்மையா? | Benefits Of Wearing Silver Jewelryவெள்ளி மோதிரத்தை நீங்கள் பல ஆண்டுகளாக அணிந்திருந்தால் அதனை பொற்கொல்லர் ஒருவரிடம் அளித்து அதனை புதுப்பித்து தர சொல்லுங்கள்.

அவர் அதனை புத்தாக்கம் செய்து தந்தவுடன்.. ஒரு வியாழக்கிழமை அன்று இரவு முழுவதும் ஒரு கோப்பை நீரில் அதனை வைத்து விடுங்கள். மறுநாள் காலை வெள்ளிக்கிழமை அணிந்துக்கொள்வதனால் சிறந்த பயன் கிடைக்கும். 

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த வெள்ளியினாலான மோதிரத்தை சிறிய அளவிலான சந்தன கட்டையில் வைத்து அதன் ஆற்றலை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அதனை உங்களது விரலில் அணிந்து கொண்டால் உங்கள் எண்ணங்களில் மாற்றம் ஏற்படுவதோடு அனைத்து செல்வங்களையும் பெற முடியும்.