மெக்சிகோவில் வீட்டில் நடந்த பார்ட்டி ஒன்றிற்கு மலர் தூவுவதற்காக ஏற்பாடு செய்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவைச் சேர்ந்த தம்பதிகள் பிறக்கப் போகும் தனது குழந்தையின் பாலினத்தை உறவினர்களுக்கு அறிவிக்கும் பார்ட்டி நிகழ்வின் போது இந்த விபத்து அரங்கேறியுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளானது அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ ட்விட்டரில் (X) தற்போது 'ஓ பேபி' என்று எழுதப்பட்ட ஒரு பெரிய பலகையின் முன் நின்று கொண்டிருந்த தம்பதிகளுக்கு மேல் விமானம் பறந்தது.

ஆடம்பரத்தால் பலியான விமானியின் உயிர்.... பார்ட்டிக்கு வந்த விமானத்தால் ஏற்பட்ட விபத்து | Plane Crash Accident Gender Reveal Party At Mexicoஆனால் இந்த நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து இறுதியில் திறந்தவெளியில் விழுந்து நொறுங்கியது. விமானம் விபத்துக்குள்ளாகும் போது மக்களின் அலறல் சத்தம் கேட்பது வீடியோவில் தெரிகிறது.

இருப்பினும், தம்பதிகள் உட்பட சிலர் இதை அறியாமல் தொடர்ந்து கொண்டாடத்தில் ஈடுபட்டதையும் வீடியோவில் காண முடிகின்றது. ஆனால் விமானத்தின் இடது புற இறக்கை பிரிந்து கீழே விழுவதையும், அதிலிருந்து விமானியும் விபத்தில் சிக்குவதையும் உறவினர் ஒருவர் அவதானித்துள்ளார்.

பின்பு மீட்பு குழுவினர் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.