ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் அஷ்டமி திதியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியானது செப்டம்பர் 06 ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
அஷ்டமி திதியானது செப்டம்பர் 06 ஆம் திகதி மாலை 3.37 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 07 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை 4.14 மணிக்கு முடிவடைகிறது.
கிருஷ்ண ஜெயந்தியானது இரவு நேரத்தில் கொண்டாடப்படுவது தான் நல்லது. ஏனெனில் கிருஷ்ணர் இரவு நேரத்தில் தான் பிறந்தார்.
ஆகவே கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலை வேளையில் பூஜைகளை செய்வதே நல்லது.
குழந்தை வரம் வேண்டுமென நினைப்பவர்கள், கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதமிருந்து கிருஷ்ணரை வழிபட்டால் கிருஷ்ணரின் அருளால் அழகான குட்டி கிருஷ்ணன் வீட்டில் பிறப்பான் என்பது ஐதீகம்.
அதோடு இந்நாளில் ஒருசில பொருட்களை வாங்கினால் கிருஷ்ணரின் அருளால் வீட்டில் செல்வம் பெருகும் மற்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
புல்லாங்குழல்
கிருஷ்ண பகவானுக்கு புல்லாங்குழல் மிகவும் பிடிக்கும். அதனால் எப்போதும் கையில் புல்லாங்குழலை வைத்திருப்பார்.
அந்த புல்லாங்குழலை கிருஷ்ண ஜெயந்தி நாளில் வாங்குவது மிகவும் நல்லது.
இதனால் வீட்டில் எப்போதும் பணம் நிறைந்திருக்கும் மற்றும் திருமணமான தம்பதிகளுக்கு இடையே காதல் அதிகரிக்கும்.
கங்கை நீர்
கிருஷ்ண ஜெயந்தி நாளில் வீட்டில் கங்கை நீரை வாங்கி, அதை வீடு முழுவதும் தெளிக்கலாம்.
இப்படி செய்வதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் அழிக்கப்படுவதோடு நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரிக்கும்.
வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் இருந்தால் வீட்டில் செல்வம் பெருகும் மற்றும் வீட்டில் உள்ளோர் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
காமதேனு பசு
கிருஷ்ண பகவான் ரோகிணி நட்சத்திரம் மற்றும் அஷ்டமி திதியில் பிறந்ததார்.
இந்த நாளில் காமதேனு பசுவை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது நல்லது.
அதுவும் வெள்ளி மற்றும் பித்தளையால் ஆன காமதேனு பசுவையை வாங்கினால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சந்தனம்
கிருஷ்ண ஜெயந்தி நாளில் வாங்க வேண்டிய மற்றொரு மங்களகரமான பொருள் தான் சந்தனம்.
நல்ல வாசனை நிறைந்த சந்தனம் கிருஷ்ணருக்கு மிகவும் பிடிக்கும். அந்த சந்தனத்தை கிருஷ்ண ஜெயந்தி நாளில் வீட்டிற்கு வாங்கி வருவது நல்லது.
சந்தனம் பூசுவதால் கோபம் குறையும் மற்றும் மனம் அமைதியாக இருக்கும்.
மயில் இறகு
பண பிரச்சனைகளை சந்திப்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் மயில் இறகுகளை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டின் தெற்கு திசையில் வைத்தால் அது வீட்டில் பணம் அதிகம் சேர வழிவகை செய்வதோடு நீண்ட நாட்களாக கைக்கு வர வேண்டிய பணமும் கைக்கு வந்து சேரும்.