திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உட்துறைமுக வீதியில் இன்று (3) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன் விபத்தில் இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியான திருகோணமலை - ஜமாலியா, நெல்சன் புறபகுதியைச் சேர்ந்த பரீஸ்தீன் (37 வயது) மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆனந்தபுரி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இரு இளைஞர்கள் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை விபத்து தொடர்பில் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
19 வயதுடைய இரு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து!
- Master Admin
- 03 April 2021
- (791)

தொடர்புடைய செய்திகள்
- 24 April 2024
- (424)
உங்கள் எல்லா பிரச்சினைகளும் நொடியில் தீர...
- 31 May 2020
- (530)
யாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு...
- 21 January 2025
- (285)
சனியின் நட்சத்திரத்தில் செவ்வாய்.., பெரு...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை போக்குவரத்து சபை கட்டாயமாக்கியுள்ள நடைமுறை
- 19 February 2025
நாளை பல பகுதிகளில் வெப்பமான காலநிலை: வெளியான எச்சரிக்கை
- 19 February 2025
டிஜிட்டல் அடையாள அட்டையை ஏப்ரல் மாதத்தின் பின் வெளியிட நடவடிக்கை
- 19 February 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
கிராமத்து பாணியில் காரசாரமான மட்டன் குழம்பு...
- 18 February 2025
என்றும் இளமையுடன் ஜொலிக்க வைக்கும் பீட்ரூட் சீரம்- தினமும் போடலாமா..
- 17 February 2025
Green Chilli Chutney: ஆந்திரா பாணியில் காரசாரமான பச்சை மிளகாய் சட்னி
- 15 February 2025
சுவையான காபியை யாரெல்லாம் குடிக்க கூடாது? மீறினால் ஆபத்து இதுதான்
- 13 February 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.